கரூர்:கரூர் அரவக்குறிச்சி தொகுதியில் பாஜக கோவை தொகுதி வேட்பாளர் அண்ணாமலை தனது வாக்கினை பதிவு செய்தார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவரிடம், கோவை தொகுதியில் பாஜகவினர் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்ததாக எழுந்த புகார் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த அவர், முழு தேர்தலையும் தான் நேர்மையாக அணுகியிருப்பதாக கூறினார்.
"பணம் கொடுத்ததை நிரூபித்தால் அரசியலை விட்டு விலகுவேன்" - வாக்களித்த பின் அண்ணாமலை சவால்! - lok sabha election 2024 - LOK SABHA ELECTION 2024
K Annamalai: வாக்காளர்களுக்கு பணம் கொடுத்ததை நிரூபித்தால் அரசியலை விட்டு விலகுவேன் என கோவை பாஜக வேட்பாளரும், அக்கட்சியின் மாநிலத் தலைவருமான அண்ணாமலை கூறியுள்ளார்.
!["பணம் கொடுத்ததை நிரூபித்தால் அரசியலை விட்டு விலகுவேன்" - வாக்களித்த பின் அண்ணாமலை சவால்! - lok sabha election 2024 K Annamalai](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/19-04-2024/1200-675-21260550-thumbnail-16x9-annamalai.jpg)
K Annamalai
Published : Apr 19, 2024, 9:12 AM IST
|Updated : Apr 19, 2024, 11:34 AM IST
பணம் கொடுத்ததை நிரூபித்தால் அரசியலை விட்டு விலகுவேன்
கோவை தொகுதியில் உள்ள யாரேனும் ஒரு வாக்காளருக்கு, பாஜகவில் யாரேனும் பணம் கொடுத்திருந்தால், அந்த நிமிடமே நான் கட்சியிலிருந்து வெளியேறி விடுவேன் என கூறினார். தர்மத்தின் போராட்டமாக தான் களத்தில் நிற்பதாகவும், பண அரசியல் இனி வேலைக்கு ஆகாது என்பதை மக்கள் உணர்த்துவார்கள் எனவும் அவர் கூறினார்.
தேர்தல் தொடர்பான கூடுதல் தகவல்களை அறிய இந்த லிங்கை க்ளிக் செய்யவும் -மக்களவைத் தேர்தல் லைவ் அப்டேட்
Last Updated : Apr 19, 2024, 11:34 AM IST