தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பெரிய பாட்டிலில் லேகியம் விற்க உள்ளோம்.. அண்ணாமலை சூசகம்! - என் மண் என் மக்கள்

BJP Public Meeting: 2024 நாடாளுமன்றத் தேர்தலில் கோவையில் தாமரை மலரும், வருகின்ற 27-ஆம் தேதி குலதெய்வம் கோயிலுக்குச் செல்வது போன்று குடும்பத்துடன் வாருங்கள் என கோவை மாவட்டம் பல்லடத்தில் நடைபெறவுள்ள பாஜக பொதுக்கூட்டத்திற்கு அண்ணாமலை அழைப்பு விடுத்துள்ளார்.

BJP Public Meeting
பாஜக பொதுக்கூட்டம்

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 23, 2024, 12:20 PM IST

கோயம்புத்தூர்: கோவை ஆவாரம்பாளையம் வி.கே.மேனன் சாலையில், பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையின் ‘என் மண் என் மக்கள்’ யாத்திரை சிங்காநல்லூர் தொகுதிக்கானது நடைபெற்று முடிந்தது. அங்கு மக்களுக்கான யாத்திரை மாற்றத்திற்கான யாத்திரை என்ற தலைப்பில் பொதுக்கூட்டமானது நடைபெற்றது. இதில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் உள்ளிட்ட பாஜக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

பொதுக்கூட்டத்தில் பேசிய பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, "அரசியல் சூழ்நிலை மாற்றத்தை கோவை மக்கள் உன்னிப்பாக கவனிப்பவர்கள். 2024 நாடாளுமன்றத் தேர்தலில் கோவையில் தாமரை மலரும். வருகின்ற 27-ஆம் தேதி குழந்தைகளுடன், குல தெய்வம் கோயிலுக்குச் செல்வது போன்று குடும்பத்துடன் வாருங்கள். அரசியல் மாற்றத்தை ஏற்படுத்தும் பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. 2024 நாடாளுமன்றத் தேர்தலில் தேசிய கட்சி ஆதிக்கம் செலுத்தப் போகும் உணர்வு இப்போதே தோன்றுகிறது.

இந்த கூட்டத்தில் இருக்கும் யாரோ ஒருவர் கூட எம்.பி. ஆகலாம். பாஜக அனைவரையும் மதிக்கும், அனைவருக்கும் வாய்ப்பு வழங்கும். வானதி அக்கா எப்படித்தான் சட்டமன்றத்தை சமளிக்கிறாங்கன்னு தெரியவில்லை. ஆனால், அவரை சமாளிக்க முடியாமல் இன்று முதல்வரே பதில் சொல்லியுள்ளார்.

ஒவ்வொரு சட்டமன்ற உறுப்பினர்களையும் கற்கண்டாக பாஜக வைத்துள்ளது. நம்முடன் இருக்கும் படை, காசு கொடுத்துச் சேர்த்தது அல்ல; தானே சேர்ந்த படை. இது சரியான நேரம், இந்த நேரத்தை விட்டுவிடக்கூடாது. பூச்சாண்டி, மாயாவி, லேகியம் விற்பவர் என்றெல்லாம் என்னைச் சொல்லி வருகிறார்கள். 27ஆம் தேதி பெரிய பாட்டிலில் லேகியம் விற்கப் போகிறோம். அது குடும்ப ஆட்சிக்கு முடிவு கட்டும் கூட்டமாக இருக்கும்.

மத்திய அரசின் திட்டங்களைப் பெயர் மாற்றி திமுக அரசு பயன்படுத்தி வருகிறது. வளர்ந்த குழந்தைகளுக்குப் பெயரை வைத்து வருகின்றனர். சாராயம் மூலம் 50 ஆயிரம் கோடி ரூபாய் வருமானம் வந்துள்ளதாக தெரிவித்துள்ளனர். ஆமை புகுந்த வீடும், திமுக ஆட்சியும் ஒன்று.

கோவையில் வெடித்த வெடிகுண்டு சம்பவத்தினால், 20 வருடங்கள் பின்னோக்கிச் சென்று விட்டது. கோவைக்கு முதலில் என்.ஐ.ஏ காவல் நிலையம் கொண்டு வருவோம். கடவுள் நம்மை ஒருமுறை காப்பாற்றி விட்டார். மீண்டும் நடக்காமல் இருக்க மனிதர்கள்தான் வேண்டும்.

வளர்ச்சிக்கும், திமுகவிற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அதை தினமும் உணர்த்தி வருகின்றனர். திமுக ஸ்டிக்கர் ஒட்டும் வேலையை நன்றாகச் செய்வார்கள். இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான் பெட்ரோல், டீசல் விலை அதிகமாக உள்ளது. தமிழ்நாடு 9 லட்சத்து 50 ஆயிரம் கோடி கடன் வாங்கியுள்ளது. ஆனால், அதை பொய் சொல்லி மறைக்கின்றனர்" என தெரிவித்தார்.

இதையும் படிங்க:சம வேலைக்கு சம ஊதியம்: போராடும் இடைநிலை ஆசிரியர்களுக்கு மக்கள் கல்விக் கூட்டியக்கம் ஆதரவு

ABOUT THE AUTHOR

...view details