சென்னை:கடந்த 2023-24 கல்வியாண்டில் அண்ணா பல்கலைக் கழகத்தின் இணைப்பு அங்கீகாரம் வழங்குவதில் தகுதியற்ற நூற்றுக்கணக்கான கல்லூரிகளுக்கு அனுமதி அளித்து மோசடி செய்ததாக அறப்போர் இயக்கம் குற்றம் சாட்டியிருந்தது.
மேலும், அது தொடர்பான புகாரில், ''353 பேராசிரியர்கள் ஒரே நேரத்தில் பல கல்லூரிகளில் முழு நேர பேராசிரியர்களாக வேலை செய்வதாக அண்ணா பல்கலைக்கழகம் அங்கீகரித்து அனுமதி வழங்கி உள்ளது. இது போன்று 972 முழுநேர பேராசிரியர் இடங்கள் மோசடியாக நிரப்பியதை அங்கீகரித்துள்ளது. 224 கல்லூரி நிர்வாகிகள், 353 பேராசிரியர்கள் என அனைவரும் விசாரிக்கப்பட வேண்டும் என கூறி ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு இயக்குநர், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பல்கலைக் கழகங்களின் வேந்தரும், ஆளுநருமான ரவி, தலைமைச் செயலர், உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, உயர்கல்வித்துறை செயலர் பிரதீப் யாதவ் ஆகியோருக்கும் புகார் அனுப்பப்பட்டுள்ளது.
இந்த நிலையில் அண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் வேல்ராஜ் கூறியதாவது, '' அண்ணாப் பல்கலைக் கழகத்தின் இணைப்புப் பெற்ற கல்லூரிகளில் 52, 500 பேராசிரியர்கள் இருக்க வேண்டும். அண்ணா பல்கலைக்கழகம் இணைப்புக் கல்லூரிகளுக்கு அங்கீகாரம் வழங்கும்போது பேராசிரியர்கள் விவரங்களை ஆய்வு செய்வோம்.