சென்னை:அண்ணா பல்கலைக்கழகம், வளாக கல்லூரி, இணைவு கல்லூரி மற்றும் தனியார் கல்லூரிகளில் எம்பிஏ, எம்சிஏ ஆகிய படிப்புகளில் சேர்வதற்குத் தமிழ்நாடு பொது நுழைவுத் தேர்வான டான்செட்டில் (TANCET) கட்டாயம் தேர்ச்சி பெற வேண்டும். அதே போல், எம்இ (M.E), எம்டெக் (M.Tech), எம்ஆர்க் (M.Arch), எம்பிளான் (M.Plan) ஆகிய முதுநிலை படிப்புகளில் சேர்வதற்குக் கடந்த ஆண்டு முதல், பொது பொறியியல் நுழைவுத் தேர்வு மற்றும் மாணவர் சேர்க்கை (CEETA) எனும் புதிய தேர்வு முறையை அண்ணா பல்கலைக்கழகம் அறிமுகம் செய்தது.
அதன்படி, 2024-25ஆம் கல்வியாண்டில் சேர்வதற்கான தமிழ்நாடு பொது நுழைவுத் தேர்வு (டான்செட்), முதுநிலை பொறியியல் படிப்புகளில் சேர்வதற்கான நுழைவுத் தேர்வு (சீட்டா-பி.ஜி) ஆகிய நுழைவுத் தேர்வுகளில் பங்கேற்கும் மாணவ மாணவிகள் ஜனவரி 10ஆம் தேதி முதல் பிப்ரவரி 12ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் எனவும், இளநிலை படிப்புகளில் 2024-25ஆம் கல்வியாண்டில் இறுதி பருவ தேர்வு எழுத உள்ள மாணவர்கள் அதற்கான மதிப்பெண் சான்றிதழ் இல்லாமலும் விண்ணப்பிக்கலாம் எனவும் அறிவிக்கப்பட்டது.
இதையும் படிங்க:"சாமி சிலைகள், நினைவுச் சின்னங்களைப் பாதுகாக்க வேண்டும்" - சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!