தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

டான்செட் தேர்வு முடிவுகள் வெளியானது! - TANCET 2024 RESULT - TANCET 2024 RESULT

TANCET 2024 Result: முதுகலை பொறியியல் படிப்புகள் மற்றும் எம்.பி.ஏ, எம்.சி.ஏ படிப்புகளில் சேர்வதற்கான டான்செட், சீட்டா பொது நுழைவுத் தேர்வு முடிவுகளை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது.

Tancet 2024 Result
Tancet 2024 Result

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 28, 2024, 5:36 PM IST

சென்னை:அண்ணா பல்கலைக்கழகம், வளாக கல்லூரி, இணைவு கல்லூரி மற்றும் தனியார் கல்லூரிகளில் எம்.பி.ஏ, எம்.சி.ஏ ஆகிய படிப்புகளில் சேர்வதற்குத் தமிழ்நாடு பொது நுழைவுத் தேர்வில் டான்செட் (TANCET) கட்டாயம் தேர்ச்சி பெற வேண்டும்.

அதைபோல, எம்.இ, எம்.டெக், எம்.ஆர்க், எம்.பிளான் ஆகிய முதுநிலை படிப்புகளில் சேர்வதற்குக் கடந்த ஆண்டு முதல், பொது பொறியியல் நுழைவுத் தேர்வு மற்றும் மாணவர் சேர்க்கை சீட்டா-பி.ஜி (CEETA) எனும் புதிய தேர்வு முறையை அண்ணா பல்கலைக்கழகம் அறிமுகம் செய்தது.இந்நிலையில், 2024ம் ஆண்டிற்கான டான்செட், சீட்டா தேர்வு முடிவுகளை அண்ணா பல்கலைக்கழகம் இன்று (மார்ச் 28) வெளியிட்டுள்ளது.

2024-25ம் கல்வியாண்டிற்கான படிப்பில் சேர்வதற்கான தமிழ்நாடு பொது நுழைவுத் தேர்வு (டான்செட்), முதுநிலை பொறியியல் படிப்புகளில் சேர்வதற்கான நுழைவுத் தேர்வு (சீட்டா-பி.ஜி) ஆகிய நுழைவுத் தேர்வுகளுக்கு மாணவர்கள் ஜனவரி 10ம் தேதி முதல் பிப்ரவரி 12ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் எனவும், இளநிலை படிப்புகளில் 2024-25ம் கல்வியாண்டில் இறுதி பருவ தேர்வு எழுத உள்ள மாணவர்கள் அதற்கான மதிப்பெண் சான்றிதழ் இல்லாமலும் விண்ணப்பிக்கலாம் எனவும் அறிவிக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து டான்செட் எம்.சி.ஏ படிப்பிற்கு 9206 பேரும், எம்.பி.ஏ படிப்பிற்கு 24 ஆயிரத்து 814 பேரும், எம். டெக்,எம் ஆர்க்,எம் பிளான் படிப்பிற்கு 5281 பேரும் விண்ணப்பம் செய்தனர். எம்.சி.ஏ நுழைவுத்தேர்வுக்கு விண்ணப்பிக்கும் மாணவர்களுக்கு மார்ச் 9ம் தேதி காலையிலும், எம்.பி.ஏ படிப்பிற்கு விண்ணப்பிக்கும் மாணவர்களுக்கு அன்றைய தினம் பிற்பகலிலும் நுழைவுத்தேர்வு நடத்தப்பட்டது.

முதுநிலை பொறியியல் நுழைவுத்தேர்வுக்கு விண்ணப்பித்த மாணவர்களுக்கு மார்ச் 10ம் தேதி தேர்வு நடத்தப்பட்டது. இந்த நுழைவுத்தேர்வுகள் மாநிலம் முழுவதும் 14 நகரங்களில் நடத்தப்பட்டது. இவர்களுக்கான தேர்வு முடிவுகளை அண்ணா பல்கலைக்கழகம் இன்று வெளியிட்டுள்ளது.

இது தொடர்பாக, அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், “முதுகலை பொறியியல் படிப்பில் மாணவர்கள் சேருவதற்கான டான்செட், சீட்டா நுழைவுத் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. அதில், டான்செட் எம்.சி.ஏ படிப்பிற்கு மார்ச் 9ம் தேதி நடைபெற்ற தேர்வினை எழுதுவதற்க 9206 பேர் விண்ணப்பம் செய்ததில் 8642 தேர்வு எழுதினர். 565 பேர் எழுதவில்லை.

பதிவிறக்கம் செய்வது எப்படி?: டான்செட் எம்.பி.ஏ படிப்பிற்கு 24 ஆயிரத்து 814 விண்ணப்பம் செய்ததில் 22849 பேர் தேர்வு எழுதினர்.1968 பேர் தேர்வு எழுதவில்லை . எம்.இ,எம்.டெக்,எம்.ஆர்க்,எம்.பிளான் ஆகிய முதுகலை பட்டப் படிப்புகளுக்கு மார்ச் 10ம் தேதி நடத்தப்பட்டத் தேர்வை எழுதுவதற்கு 5281 பேர் விண்ணப்பம் செய்தனர். அவர்களில் 4648 பேர் தேர்வு எழுதினர்.633 பேர் தேர்வு எழுதவில்லை. இவர்களுக்கான தேர்வு முடிவுகள் https://tancet.annauniv.edu/tancet என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது” என தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க: அரசுப் பள்ளிகளில் 27 நாளில் 2.84 லட்சம் மாணவர்கள் சேர்க்கை! - Student Admission 2024

ABOUT THE AUTHOR

...view details