சென்னை:அண்ணா பல்கலைக் கழகத்தின் ஆட்சிமன்றக்குழுவின் முடிவில் கடந்த நவம்பர் 20ஆம் தேதி அண்ணாப் பல்கலைக் கழக பதிவாளர் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில், இனி வரும் காலங்களில் ஆசிரியர்கள் அல்லது ஆசிரியர் அல்லாத பணியாளர்களை தினக்கூலி/ மதிப்பூதிய அடிப்படையில் நியமிக்க வேண்டும் என அறிவித்திருந்தார். அதற்கு பல்வேறு தரப்பில் இருந்து கண்டனம் எழுந்த நிலையில் அண்ணாப் பல்கலைக் கழகத்தின் பதிவாளர் பிரகாஷ் நேற்று (நவம்பர் 21) திருத்திய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
அதன்படி, "அண்ணா பல்கலைக் கழகத்தின் ஆட்சிமன்றக்குழுவின் கூட்டம் 272ன் ஒப்புதல் அடிப்படையிலும், நிதித்துறையின் ஒப்புதல் அடிப்படையிலும் ஆசிரியர் அல்லாத பணியாளர்களை தினக்கூலி அல்லது தொகுப்பூதிய அடிப்படையில் நியமனம் செய்யப்படுவார்கள்.
இதையும் படிங்க:யானைகளை காக்கும் ஏ.ஐ. கேமராக்கள்... தமிழக வனத்துறையின் புதிய முயற்சியால் ரயில் விபத்தில் விலங்குகள் உயிரிழப்புக்கு முற்றுப்புள்ளி!