தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பாஜகவினரை ஒருமையில் பேசிய திமுக அமைச்சர்.. வைரலாகும் வீடியோ! - Anitha Radhakrishnan viral video - ANITHA RADHAKRISHNAN VIRAL VIDEO

Anitha Radhakrishnan Vs BJP: திருச்செந்தூர் அருகே, இந்தியா கூட்டணி செயல்வீரர்கள் கூட்டத்தில், பாஜகவினரை திமுக அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ஒருமையில் பேசியதால் பரபரப்பு ஏற்பட்டது.

பாஜகவினரை ஒருமையில் பேசிய திமுக அமைச்சர்
பாஜகவினரை ஒருமையில் பேசிய திமுக அமைச்சர்

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 23, 2024, 4:06 PM IST

பாஜகவினரை ஒருமையில் பேசிய திமுக அமைச்சர்

தூத்துக்குடி: திருச்செந்தூர் அருகே உள்ள தண்டுபத்து கிராமத்தில், இந்தியா கூட்டணியின் செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்திற்கு தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி தலைமை வகித்தார். மேலும், மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் முன்னிலை வகித்தார்.

இந்த நிகழ்வின் போது பேசிய அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், "நான் நாளிதழில் விளம்பரம் போடும்போது, அதில் தவறுதலாக சீன ராக்கெட்டின் படம் இடம்பெற்றிருந்தது. ஆனால், பிரதமர் மோடி சீன நாட்டு பிரதமருடன் மகாபலிபுரம் உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு வேஷ்டி சட்டையுடன் சுற்றுலாவாக பயணித்தார். மேலும் பிரதமர் மோடி, காமராஜர் பற்றி புகழாரம் பாடினார்” என்றார்.

இதனைத் தொடர்ந்து பேசிய அமைச்சர், காமராஜர் டெல்லியில் இருந்த போது அவரை கொல்ல முயற்சித்ததாக பாஜகவினரை ஒருமையில் பேசினார். மேலும், காமராஜரைப் பற்றி பேச இவர்களுக்கு என்ன தகுதி உள்ளது எனவும், வரும் தூத்துக்குடி நாடாளுமன்றத் தேர்தலில் கனிமொழியை எதிர்த்து நிற்கும் அனைத்து வேட்பாளர்களையும் டெபாசிட் இழக்கச் செய்ய வேண்டும்" என்றார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதையும் படிங்க:அனிதா ராதாகிருஷ்ணன் மீதான சொத்துக்குவிப்பு வழக்கு ஒத்திவைப்பு! - Minister Anitha Radhakrishnan

ABOUT THE AUTHOR

...view details