சென்னை :தமிழகத்தில் 14 மாவட்டங்களில் 40 மலையேற்ற பயணத் திட்டத்தை (டிரக் தமிழ்நாடு) அரசு அறிமுகம் செய்திருக்கிறது. இந்தத் திட்டத்தை கைவிட வேண்டும் என்று அரசுக்கு உத்தரவிட வேண்டுமென விலங்குகள் நல ஆர்வலர் முரளிதரன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.
அந்த மனுவில், "பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகளில் மலையேற்ற பயணத்தை அனுமதித்தால் வனப்பகுதிகளின் சுற்றுச்சூழல் மட்டுமல்லாமல் விலங்குகளுக்கும் பாதிப்பு ஏற்படும். தமிழகத்தில் 38 யானைகள் வழித்தடங்கள் கண்டறியப்பட்டுள்ள நிலையில், அந்தப் பகுதிகளில் மலையேற்றத்தை அனுமதிக்கும் போது அதிக எண்ணிக்கையில் மனித நடமாட்டம் ஏற்படும். அதன் காரணமாக விலங்குகள் உணவு தேடும் நடவடிக்கை, இனப்பெருக்க நடவடிக்கைகள் பாதிக்கப்படும்.
இதையும் படிங்க :மருத்துவர்கள், மருத்துவமனைகள் ஊடகங்களில் விளம்பரம் செய்ய தடையா? ஐகோர்ட் உத்தரவு!