வேலூர்:வேலூர் மாவட்டம் குடியாத்தம் கே.வி குப்பத்தை அடுத்த துருவம் பகுதியில் கடந்த மாதம் சிறுத்தை தாக்கி இளம் பெண் பலியான சம்பவத்தை தொடர்ந்து குடியாத்தம் கே.வி.குப்பம் பேரணாம்பட்டு உள்ளிட்ட வனப் பகுதியை ஒட்டிய கிராமங்களில் சிறுத்தை நடமாட்டத்தை கண்காணிக்கும் விதமாக டிராப் கேமரா மற்றும் ட்ரோன் கேமரா பொறுத்தப்பட்டன.
ஏ.ஐ தொழில்நுட்ப கேமரா:இந்த பாதுகாப்பு அம்சங்களை அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்லும் வகையில் வேலூர் மாவட்ட ஆட்சியர் சுப்புலெட்சுமி உத்தரவின்பேரில் சிறுத்தை நடமாட்டத்தை கண்காணிக்கும் ஏ.ஐ தொழில்நுட்ப கேமரா மற்றும் ஒலிபெருக்கி அமைக்கும் திட்டத்தை தனியார் தொழில்நுட்ப வல்லுநருடன் சேர்ந்து வனத்துறையினர் குடியாத்தம் அருகே உள்ள காந்தி கணவாய் பகுதியில் நேற்று (ஜனவரி 7) தொடங்கி வைத்தனர்.
எப்படி செயல்படும்:இந்த ஏஐ தொழில் நுட்ப கேமரா சிறுத்தை நடமாட்டத்தை பதிவு செய்வதுடன், தானாக ஒலி எழுப்பி எச்சரிக்கை எழுப்ப கூடியது. இவ்வாறு அந்த ஏஐ தொழில்நுட்ப கேமராகளின் உதவியோடு சிறுத்தை காட்டுக்குள் விரட்டப்பட உள்ளனர்.