தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சுற்றுலா வந்த மாணவர்களுக்கு நேர்ந்த சோகம்; ராட்சத அலையில் சிக்கி ஒருவர் பலி.. 4 பேர் மாயம்! - மாமல்லபுரம்

Mamallapuram Beach: செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரத்திற்குச் சுற்றுலா வந்த ஆந்திரப் பிரதேசத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவர்கள் கடலுக்குக் குளிக்கச் சென்ற நிலையில், ராட்சத அலை அடித்துச் செல்லப்பட்ட 10 மாணவர்களில் 4 மாணவர்கள் மாயமாகி உள்ளனர்.

மாமல்லபுரம்
மாமல்லபுரம்

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 2, 2024, 7:13 PM IST

செங்கல்பட்டு: ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த அரசு கலைக் கல்லூரியில் இருந்து 40 மாணவர்கள் செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரத்திற்குச் சுற்றலா வந்தனர். அனைத்துப் புராதனச் சின்னங்களையும் பார்வையிட்ட மாணவர்கள் கடற்கரைக்குச் சென்றனர்.

கடலில் மாணவர்கள் குளிக்கச் சென்ற போது கடலின் சீற்றம் அதிகமாக இருந்ததால் 10 மாணவர்களை ராட்சத அலை கடலுக்குள் இழுத்துச் சென்றது. அதனைக் கண்ட அப்பகுதி மீனவர்கள் படகு மூலம் 6 பேரை மீட்டனர். அதில், விஜய் என்ற மாணவர் உயிரிழந்தார். மீட்கப்பட்ட மற்ற மாணவர்கள் முதல் உதவிக்காகச் செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

மேலும், மாயமான 4 மாணவர்களை மாமல்லபுரம் தீயணைப்புத் துறையினர் காவல் துறையினரின் உதவியோடு தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

இதையும் படிங்க:மலைகளின் இளவரசிக்குள் ஓர் மர்ம குகை.. 'மஞ்சுமெல் பாய்ஸ்' கதை உண்மையா?

ABOUT THE AUTHOR

...view details