திருப்பத்தூர்: நாட்டில் 18வது நாடாளுமன்றத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில், திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூரில் உள்ள தனியார் அரசு நிதியுதவி பெறும் பள்ளியில், வேலூர் மற்றும் திருவண்ணாமலை நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட, திருப்பத்தூர், ஜோலார்பேட்டை, வாணியம்பாடி, ஆம்பூர் ஆகிய சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட 1,000க்கும் மேற்பட்ட ஆசிரியர்களுக்கு இரண்டாம் கட்ட தேர்தல் பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டது.
அதன் பின்னர், ஆசிரியர்களுக்கு நாடாளுமன்றத் தேர்தலில் வாக்களிக்க அஞ்சல் தபால் வாக்குகள் வழங்கப்பட்டது. இந்நிலையில், திருவண்ணாமலை நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதி ஆசிரியர்கள், வாக்குச் சீட்டு செலுத்த தேர்தல் நடத்தும் அதிகாரிகள் முறையான தபால் பெட்டி வைக்காமல், மின்சாரத் துறையினர் பயன்படுத்தும் பெட்டியை வைத்து, அதற்கு முறையான பூட்டு மற்றும் சீல் வைக்காமல் இருந்ததாகக் கூறி, தேர்தல் அதிகாரிகள் குளறுபடியில் ஈடுபட்டதாக வாக்கு செலுத்த வந்த ஆசிரியர்கள், தேர்தல் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.