தேனி:லாரி மற்றும் இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் குறித்து அல்லிநகரம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கோண்டு வருகின்றனர்.
தேனி அருகே கோட்டூர் பகுதியைச் சேர்ந்தவ பிரவீன் (35). அவரது சகோதரர் மதன்குமார் (32) இருவரும் தலா ஒரு இரு சக்கர வாகனத்தில் திண்டுக்கல் - குமுளி தேசிய நெடுஞ்சாலையில் பெரியகுளம் நோக்கி சென்று கொண்டிருந்துள்ளனர். அப்போது மதுரையை நோக்கி காய்கறி ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று சென்றுள்ளது.
அப்போது, அல்லிநகரம் அருகே எதிர்பாராத விதமாக இரண்டு இருசக்கர வாகனங்களும் லாரியில் மோதி விபத்துக்குள்ளாயின. இதில் பிரவீன் லாரியின் சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். மதன்குமார் படுகாயங்களுடன் உயிர் தப்பியுள்ளார். இருசக்கர வாகனம் லாரியில் மோதிய வேகத்தில் சுமார் அரை கிலோ மீட்டர் தூரம் இழுத்துச் சென்றதில், பெட்ரோல் கசிந்து லாரி தீ பற்றி எரிய தொடங்கியுள்ளது.