தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தமிழக வெற்றி கழகத்துடன் கூட்டணியா? மதுரையில் சீமான் பேட்டி! - SEEMAN ON TVK ALLIANCE

தமிழக வெற்றி கழகத்துடன் நாம் தமிழர் கட்சி கூட்டணி அமைக்குமா? என்ற கேள்விக்கு மதுரையில் சீமான் பதில் அளித்தார்.

நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேட்டி
நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேட்டி (ETV Bharat Tamilnadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 19, 2025, 5:20 PM IST

சென்னை:தமிழக வெற்றிக் கழகத்துடன் கூட்டணி வைப்பது சரியாக வராது என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார்.

நாம் தமிழர் கட்சியின் விருதுநகர், ராமநாதபுரம், சிவகங்கை, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களுக்கான நிர்வாகிகள் கலந்தாய்வு கூட்டம் மதுரையில் இன்று நடைபெற்றது, இக் கூட்டத்தில் பங்கேற்ற நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், "மும்மொழி கொள்கையில் திமுக, அதிமுகவின் நிலைப்பாடு என்ன? மும்மொழி கொள்கையில் திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் நிலைப்பாடு என்ன? முதன் முதலில் இந்தியை திணித்தது யார்? இந்தியை தினித்தவர்களிடம் திமுக கூட்டணி வைத்து வெற்றி பெற்றுள்ளது. திராவிட கட்சிகளின் ஆட்சியில் எந்த இடத்தில் இந்தி இல்லை?" என்றார்.

மேலும், "ஒரே நாட்டில் ஒற்றுமையாக வாழ்கிறார்கள் என்பது தான் இந்த நாட்டின் சிறப்பு. இந்தியை ஏற்றுக் கொள்ள வேண்டுமானால் மொழிவாரியாக மாநிலங்கள் ஏன் பிரிக்கப்பட்டன? இந்தி மொழி பயில வேண்டும் என்றால் அதற்க்கான சிறப்பு காரணங்கள் என்ன? இந்தியாவின் தேசிய மொழி இந்தி என எந்த சாசனத்தில் உள்ளது? இந்தியா பழமொழி பேசும் மக்கள் ஒன்றினைந்த ஐக்கியம். நாடு எங்கும் இந்தியை திணிப்பது தேவையற்றது. இரண்டு மூன்று மாநிலங்களில் பேசக் கூடிய இந்தி மொழியை திணிக்க நினைப்பது தவறு. இந்தி மொழி தேவையெனில் கற்றுக் கொள்ளலாம்.

இந்தி படித்தால் அடுத்த கட்ட வளர்ச்சி என்றால் வட மாநிலத்தில் இருந்து ஒன்றரை கோடி மக்கள் ஏன் தமிழகத்திற்கு வேலைக்காக வருகிறார்கள்? இலங்கை, வங்கதேசத்தில் நடந்தது இந்தியாவில் நடக்கும். திராவிடனை அரியணையில் உட்கார வைக்க வடஇந்தியர் தான் தேவைப்படுகிறார். தேர்தல் வியூகங்களுக்கு வடஇந்தியர்களுக்கு பதிலாக இங்குள்ள ஹெச்.ராஜா, ரங்கராஜ் பாண்டேவை பயன்படுத்தலாமே? நான் நோட்டுக்காக, சீட்டுக்காக அரசியலுக்கு வரவில்லை. நம் நாட்டுக்காக அரசியலுக்கு வந்துள்ளேன்.

தன்னை முன் நிறுத்தி கொள்பவர்கள் நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகி செல்கிறார்கள். சீமானுக்கு பின் யார் தலைவர் எனும் போட்டியால் நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகுகிறார்கள். நேர்மையாக கட்சி நடத்த வேண்டுமானால், சர்வாதிகாரியாக செயல்படுவேன். நான் குட்டை, குளத்தில் வலை வீசவில்லை, தமிழ் தேசியம் எனும் பெருங்கடலில் வலை வீசுகிறேன்.

வருண் ஐ.பி.எஸ் கட்சிக்காரர் போல பேசுகிறார். அவர் கடமையை செய்வதை விட்டு விட்டு கட்சிக்காரன் போல செயல்படுகிறார். காவல்துறை உயரதிகாரிகள் வருண் ஐபிஎஸ் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

திராவிடம் பேசாமல் பெரியார் குறித்து பேசாமல் நான் அங்கீகரிக்கப்பட்ட கட்சியாக வளர்ந்துள்ளேன். ஆட்சி அதிகாரத்தில் இருந்த பெரிய பெரிய கட்சிகள் கூட்டணிக்கு அழைத்த போதே நான் செல்லவில்லை. ஆகவே தமிழக வெற்றி கழகத்துடன் கூட்டணி வைப்பது சரியாக வராது"

இவ்வாறு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார்.

ABOUT THE AUTHOR

...view details