தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவுடன் சமக கூட்டணி - சரத்குமார் அறிவிப்பு! - sarathkumar bjp

Sarathkumar in BJP alliance : நாடாளுமன்றத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியுடன், அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி கூட்டணி அமைத்துள்ளதாக, அக்கட்சியின் தலைவர் சரத்குமார் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளார்.

sarathkumar BJP alliance
பாஜக சமக கூட்டணி

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 6, 2024, 4:21 PM IST

சென்னை: மூன்றாவது முறையாக நரேந்திர மோடி பாரத பிரதமராக தேர்ந்தெடுக்க பாரதிய ஜனதா கட்சியுடன் இணைந்து செயல்பட முடிவு எடுத்துள்ளேன் என சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக சரத்குமார் வெளியிட்ட அறிக்கையில், “பாரதிய ஜனதா கட்சியின் தமிழக பொறுப்பாளர் அரவிந்த் மேனன், பிப்ரவரி 28ஆம் தேதி என்னை நேரில் சந்தித்து, நாடாளுமன்றத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியுடன் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி கூட்டணி குறித்து முதல் கட்ட பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.

அதில் ஒருமித்த கருத்துகள் உடன்பட்டதால், நேற்று (மார்ச் 5) மத்திய அமைச்சர் எல்.முருகன், தேசிய செயலாளர் மற்றும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எச்.ராஜா, பாஜக தமிழக பொறுப்பாளர் மற்றும் தேசியச் செயலாளர் அரவிந்த் மேனன் ஆகிய மூவரும் குழுவாக வந்து, என்னைச் சந்தித்து கூட்டணி குறித்து மீண்டும் பேசினார்கள். இரண்டாம் கட்ட கூட்டணி பேச்சுவார்த்தை சுமூகமாக நடந்தேறியது.

அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் உயர்மட்டக்குழு, மாநில நிர்வாகிகள் மற்றும் மாவட்டச் செயலாளர்கள் ஏற்கனவே எனக்கு நாடாளுமன்றத் தேர்தலில் முடிவெடுக்கும் அதிகாரத்தினை வழங்கி, எடுக்கும் முடிவுக்கு கட்டுப்படுவோம் என்று உத்தரவாதம் அளித்ததன் அடிப்படையில், நாடு வளம் பெற, ஒற்றுமையுணர்வு ஓங்கிட, மீண்டும் நல்லாட்சி அமைந்திட மூன்றாவது முறையாக நரேந்திர மோடி பாரத பிரதமராகத் தேர்ந்தெடுக்க பாரதிய ஜனதா கட்சியுடன் இணைந்து செயல்பட முடிவு எடுத்துள்ளேன். மற்ற விவரங்களை இன்னும் ஒரு வார காலத்திற்குள் தெரிவிக்கிறேன்” என தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க:சனாதன விவகாரம் - அமைச்சர் உதயநிதிக்கு எதிரான வழக்கு தள்ளுபடி - சென்னை உயர்நீதிமன்றம்!

ABOUT THE AUTHOR

...view details