சென்னை:சென்னை அடுத்தபல்லாவரம் பகுதியைச் சேர்ந்தவர் தொழிலதிபர் லிங்கராஜ். இவர் அதிமுக உறுப்பினராக இருந்து வருகிறார். மேலும், லிங்கராஜ் பி எல் ஆர் ஸ்டில் சப்ளை என்கிற பெயரில் ஜல்லி கற்கள், சிமெண்ட், எம்சாண்ட் மணல் போன்றவற்றை கட்டுமான நிறுவனங்களுக்கு விற்பனை செய்யும் தொழில் செய்து வருகிறார்.
இந்த நிலையில், நேற்று இரவு வருமான வரித்துறை அதிகாரிகள் லிங்கராஜ்-க்குச் சொந்தமான பள்ளிக்கரணையில் உள்ள கான்கிரீட் நிறுவனத்தில் சோதனை நடத்தியுள்ளனர். லிங்கராஜ் வீடு மற்றும் தொழில் நடக்கும் இடத்தில் நடத்தப்பட்ட வருமான வரித்துறை சோதனையில், 2.85 கோடி ரூபாய் ரொக்கம் வருமான வரித்துறை அதிகாரிகள் கைப்பற்றியதாக தெரிவித்தனர்.
மேலும், லிங்கராஜ் இன்றைய தினமே வருமான வரித்துறை அலுவலகத்தில் நேரில் விசாரணைக்கு ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் எனவும் சம்மன் அனுப்பி இருந்தனர். இந்த நிலையில், இது அரசியல், தேர்தல் தொடர்புடைய பணம் அல்ல எனவும், இது தன்னுடைய தொழில் மூலமாக ஈட்டிய பணம் எனவும், தற்போது தேர்தல் நடத்தும் விதி அமலில் இருப்பதால், தனது பணத்தை வங்கியில் வைக்காமல் தனது அலுவலகத்தில் வைத்திருந்ததாகவும், இந்த நிலையில்தான் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நேரத்தில் பணத்தை கைப்பற்றியுள்ளனர் என லிங்கராஜ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இது குறித்து உரிய விளக்கம் அளிக்க இருப்பதாக லிங்கராஜ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அதற்கு உரிய ஆவணங்களை கொடுக்கும்படியும் வருமானவரித்துறைகள் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: வாக்காளர் அடையாள அட்டை இல்லாமல் கூட வாக்களிக்கலாம்! எப்படி தெரியுமா? - Lok Sabha Election 2024