தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

விக்ரவாண்டி இடைத் தேர்தல் புறக்கணிப்பு - அதிமுக அறிவிப்பு! - Vikravandi Bye Election ADMK

ஜூலை 10ஆம் தேதி நடைபெற உள்ள விக்ரவாண்டி இடைத் தேர்தலை புறக்கணிக்கப் போவதாக அதிமுக தலைமை கழகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

Etv Bharat
ADMK Meeting (Etv Bharat)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jun 15, 2024, 4:29 PM IST

சென்னை:விக்ரவாண்டி இடைத் தேர்தலை புறக்கணிக்கப் போவதாக அதிமுக அறிவித்துள்ளது. சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ள, நிர்வாக திறனற்ற அராஜக விடியா திமுக ஆட்சியில் ஜூலை 10ஆம் தேதி நடைபெற உள்ள விக்ரவாண்டி சட்டமன்ற தொகுதிக்கான இடைத் தேர்தலை புறக்கணிக்கப் போவதாக அதிமுக தலைமை கழகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமைக் கழக அலுவலத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தை தொடர்ந்து இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. விக்கிரவாண்டி சட்டசபை தொகுதி எம்எல்ஏவாக இருந்த நா.புகழேந்தி. கடந்த ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி திடீர் உடல்நலக் குறைவால் காலமானார்.

இதனால் விக்கிரவாண்டி சட்டசபை தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து விக்கிரவாண்டி சட்டசபை தொகுதிக்கான இடைத் தேர்தல் அறிவிப்பு ஜூன் 10ஆம் தேதி இந்திய தேர்தல் ஆணையத்தால் வெளியிடப்பட்டது. இந்த தொகுதியில் ஜூலை 10 ஆம் தேதி இடைத் தேர்தல் நடைபெற உள்ளது.

விக்கிரவாண்டி தொகுதி சட்டசபை இடைத் தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் ஜூன் 14ஆம் தேதி முதல் தொடங்கியது. இடைத் தேர்தலில் திமுக சார்பில் வேட்பாளரக அன்னியூர் சிவா அறிவிக்கப்பட்டுள்ளார். பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் பாமக போட்டியிடும் என நேற்று (ஜூன்.14) தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை அறிவித்திருந்தார்.

இந்த நிலையில், பாமக வேட்பாளராக சி.அன்புமணி களமிறக்கப்பட்டுள்ளதாக அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் அறிவித்துள்ளார். இந்நிலையில் விக்ரவாண்டி இடைத் தேர்தலை புறக்கணிக்கப் போவதாக அதிமுக அறிவித்து உள்ளது.

இதையும் படிங்க:விக்கிரவாண்டி இடைத்தேர்தல்; பாமக வேட்பாளராக சி.அன்புமணி அறிவிப்பு! - Vikravandi election PMK candidate

ABOUT THE AUTHOR

...view details