திண்டுக்கல்:திண்டுக்கல் அடுத்த, அகரம் பேரூராட்சிக்கு உட்பட்ட கருங்கல்பட்டி கிராமத்தில், முன்பகை காரணமாக அதிமுகவைச் சேர்ந்த குழந்தை ராஜமாணிக்கம், சவரிமுத்து, ஞானமணி ஆகிய 3 பேரை அகரம் பேரூராட்சி திமுக தலைவர் நந்தகோபால் என்ற கருத்த மணி, தன்னுடைய ஆதரவாளர்களுடன் சேர்ந்து மூவரையும் வீடு புகுந்து தாக்கியதாகக் கூறப்படுகிறது.
அப்போது வீட்டில் இருந்த பெண்களையும் தாக்க முற்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதனால் மூவரின் அலறல் சத்தம் கேட்டு அக்கம், பக்கத்தில் உள்ள பொதுமக்கள் திரண்டு வந்து, திமுக தலைவர் நந்தகோபாலை சூழ்ந்து கொண்டு சரமாரியாக கேள்விகளை எழுப்பி முற்றுகையிட்டுள்ளனர்.