தஞ்சாவூர்:தஞ்சாவூர் மாநகராட்சியின் மாமன்ற அவசரக் கூட்டம் மேயர் இராமநாதன் தலைமையில், துணை மேயர் அஞ்சுகம் பூபதி, ஆணையர் மகேஸ்வரி முன்னிலையில் இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்றது. இதில் திமுக மற்றும் அதிமுக கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில், “காந்திஜி வணிக வளாகம் மாநகராட்சி இடத்தில் தனியார் துணிக்கடை ஏலம் விட்டதில் முறைகேடு நடைபெற்றுள்ளது. எனவே, முன்னாள் ஆணையர் சரவணக்குமார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், முறைகேட்டுக்கு உடந்தையாக இருந்த மேயர் இராமநாதன் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வர உள்ளதாக” அதிமுக கவுன்சிலர்கள் தெரிவித்துள்ளனர்.
இதனால், கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது. இதனையடுத்து, மேயர் இராமநாதன் பேசுகையில், “தற்போது தீர்மானம் எண் 51 முதல் 100 வரையிலான பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்படுகிறது. சர்ச்சைக்குரிய தீர்மானம் எண் 54 ஒத்தி வைக்கப்பப்படுகிறது” என்றார்.
இது குறித்து அதிமுக கவுன்சிலர் கோபால் கூறுகையில், “தனியார் நிறுவனத்திற்கு மாநகராட்சி இடத்தை 9 ஆண்டுகளுக்கு கொடுத்துள்ளனர். மாநகராட்சி சட்ட திட்டத்தின் படி 3 ஆண்டுகளுக்கு மேலாக இடத்தை குத்தகை கொடுப்பதற்கு எந்த வழிவகையும் கிடையாது. ஆனால், விதிமுறைகளை மீறி 9 ஆண்டுகளுக்கு கொடுத்துள்ளனர்.