வேலூர்:காட்பாடியில் உள்ள அதிமுக அலுவலகத்தில் வேலூர் மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் நிர்வாகிகள் செயல்பாடு உறுப்பினர் அட்டை வழங்குவது, பூத் கமிட்டி அமைப்பது குறித்த கள ஆய்வு கூட்டமானது மாநகர் மாவட்ட செயலாளர் அப்பு தலைமையில் நடைபெற்றது. இதில் அதிமுக துணை பொதுசெயலாளர் கே.பி.முனுசாமி கலந்துகொண்டு நிர்வாகிகளின் மத்தியில் பேசுகையில்,"ஜெயலலிதாவிடம் எப்படி பய பக்தியுடன் இருந்தோமோ, அதே போல் எடப்பாடியிடம் பயபக்தியுடன் இருக்க வேண்டும்.
நமக்கு முதல் கடைசி எதிரி திமுக தான் அந்த தீய சக்தியுடன் நாம் எக்காலத்திலும் உறவு வைத்துக்கொள்ளக் கூடாது. கருணாநிதி, ஸ்டாலினை உருவாக்கினார் ஸ்டாலின் தன் மகனை (உதயநிதி) உருவாக்கினார். எம்.ஜி.ஆரால் வாழ்வு பெற்றவர் துரைமுருகன் ஆனால் எம்.ஜி.ஆரை அவர் தலைவராக ஏற்கவில்லை. ஆனால் கருணாநிதிக்கு பின் ஏன் துரைமுருகன் அந்த இடத்திற்கு வர முடியவில்லை. மகன் வந்தான் ஏற்றுக்கொண்டார், பேரன் வந்தாலும் ஏற்றுக்கொண்டார். காரணம் கட்சி விசுவாசம் கிடையாது.
பதவியை தக்க வைக்க பேரன் தலைமையை கூட ஏற்றுக்கொள்கிறார்" என்றார். தொடர்ந்து பேசிய அவர்,"2021 தேர்தலில் அதிமுக வெற்றி பெற்று எடப்பாடி முதலமைச்சராகியிருந்தால் ஸ்டாலின் அரசியலில் இருந்து ஓடிவிட்டிருப்பார். அரசியலை விட்டு ஓடிவிட்டால் உதய நிதி ஸ்டாலின் எங்கு வருவது.
இதையும் படிங்க:2026-இல் யாருடன் கூட்டணி? - அன்புமணி ராமதாஸ் சொன்ன நச் பதில்!