தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

"அதிமுக ஒரு சீட் கூட ஜெயிக்காது" -பெங்களூரு புகழேந்தி ஆவேசம்! - BANGALORE PUGAZHENDI

இப்படியே சென்று கொண்டிருந்தால் சேலத்தில் ஒரு சீட் கூட அதிமுக வெற்றி பெற முடியாது; அதிமுகவை ஒருங்கிணைக்க மூத்த நிர்வாகிகள் இறங்கி வந்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என பெங்களூரு புகழேந்தி தெரிவித்துள்ளார்.

பெங்களூரு புகழேந்தி
பெங்களூரு புகழேந்தி (Credits - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 17, 2024, 9:31 PM IST

சேலம்:அதிமுக 53வது ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு சேலம் அண்ணா பூங்கா அருகே உள்ள முன்னாள் முதல்வர்கள் எம்ஜிஆர், ஜெயலலிதா திருவுருவ சிலைக்கு ஓபிஎஸ் ஆதரவாளர், பெங்களூர் புகழேந்தி மாலை அணிவித்து மரியாதை செய்தார். பின்னர் உடன் வந்தவர்களுக்கு இனிப்பு வழங்கி மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டார்.

இதனையடுத்து செய்தியாளரகளுக்கு பேட்டி அளித்தவர் அவர் கூறியதாவது,"இந்த இயக்கத்தை தொடங்கியவர் புரட்சித்தலைவர். அவரைத் தொடர்ந்து. இந்த இயக்கம் மக்களுக்கு சேவை செய்தவர்களால் வளர்ந்தது. அந்த தலைவர் மட்டும் இல்லாமல் இருந்திருந்தால் பல்வேறு அரசு நலத் திட்டங்கள் தமிழகத்திற்கு வந்திருக்காது.

ஜெயலலிதா அவர்களும் தமிழகத்திற்கு தேவையான திட்டங்களை கொண்டு வந்தார். தற்போது 52 ஆண்டுகள் முடிந்து இந்த இயக்கம் 53வது ஆண்டில் அடி எடுத்து வைத்திருக்கிறது. இதை நினைவு கூற முன்னாள் முதலமைச்சர் சிலைகளுக்கு மாலை அணிவித்து இருக்கிறேன்.

ஆனால் இன்றைய நாளில் கூட முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, யாரையும் கட்சியில் சேர்க்க மாட்டோம் நீக்கியவர்கள் நீக்கியவர்கள் தான் என தெரிவித்திருக்கிறார். இது தவிர எந்த தியாகத்தையும் செய்ய தயார் என கூறி இருக்கிறார். அவர் எந்த தியாகம் செய்தார் என தெரியவில்லை.

இதையும் படிங்க:பர்த் டே பேபி அதிமுக: வைராக்கிய எடப்பாடி! "இனி திருந்தமாட்டார்" என சீறும் ஓ.பி.எஸ். அணி

அவர் ஆட்சிக்கு வருவது தான் தியாகமோ என்னவோ தெரியவில்லை. இப்படியே சென்று கொண்டிருந்தால் சேலத்தில் ஒரு சீட் கூட அதிமுக வெற்றி பெற முடியாது. ஒற்றுமையாக இருந்தால் வெற்றி பெறலாம் இல்லை எனில் நிச்சயம் வெற்றி பெற முடியாது. எடப்பாடி பழனிசாமி அதிமுக பொதுச் செயலாளர் ஒற்றுமை என்ற வார்த்தைக்கு இடம் தர மறுக்கிறார்.

இது நியாயம் இல்லை அதிமுக மூத்த நிர்வாகிகள் செம்மலை, பொன்னையன் போன்றவர்கள் இதை கேட்க வேண்டும்.

சர்வாதிகாரி கையில் அதிமுக உள்ளது. கட்சி அழிந்து கொண்டிருக்கிறது, இனியாவது குரல் கொடுங்கள். ஒருங்கிணைப்பு குழு அமைத்து கூப்பிட்டுப் பார்த்தார்கள். ஆனால் யாரும் ஒருங்கிணைவில்லை. சசிகலாவும் இது குறித்து ஏதும் பேசவில்லை.

மூத்த நிர்வாகிகள் இறங்கி வந்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். எதிர்த்து நிற்பதில் சரியான முடிவு எடுக்க வேண்டும்.
சென்னை மிகக் கடுமையான வெள்ளத்தை சந்திக்கும் என்று கூறினார்கள். ஆனால் தமிழக அரசு எடுத்த நடவடிக்கையால் மழைநீர் எங்கும் நிற்கவில்லை. களப்பணியாற்றிய உதயநிதி ஸ்டாலினையும் பாராட்டுகிறேன்"என்று புகழேந்தி கூறினார்.

ABOUT THE AUTHOR

...view details