சென்னை:ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகமான எம்ஜிஆர் மாளிகையில், அண்ணா தொழிற்சங்க பேரவை சார்பில் நலிந்த நிலையில் உள்ள 171 தொழிலாளர்களுக்கு ஒரு கோடியே 71 லட்சம் ரூபாய்க்கான காசோலையை அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ''அண்ணா தொழிற்சங்கத்தை சேர்ந்த 171 பேருக்கு நிதியுதவி இன்று வழங்கப்பட்டுள்ளது. விபத்திற்கு உள்ளாகி பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதி வழங்கினோம் என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், கவுரவ உதவி பேராசிரியர் பணியிடங்கள் 1,000 காலியாக உள்ளதாக தகவல் வந்துள்ளது. கல்லூரிகளில் உதவி பேராசியர் பணி அதிகம் காலியாக உள்ளது. இது மாணவர்களின் எதிர்கால பிரச்சனை என்பதால் அரசு உடனடியாக காலியிடங்களை நிரப்ப வேண்டும் என்றார்.
இதையும் படிங்க:யதார்த்த அரசியல் சாலையில் தவெக.. விஜய் கடிதம்!
மேலும், பகுதி நேர ஆசிரியர்களுக்கு முன் கூட்டியே சம்பளம் வழங்க வேண்டும். சென்னையில் பூங்காங்கள் தனியாருக்கு தாரை வார்க்கப்படுவதாக செய்தி வருகிறது, இது கண்டிக்கத்தது. அரசு மக்கள் நலனை கருத்தில் கொள்ள வேண்டும். தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு போனஸ் வழங்கப்பட வேண்டும் என்றார்.
விஜய் மாநாடு குறித்த கேள்விக்கு பதில் அளித்த எடப்பாடி பழனிசாமி, ஒவ்வொரு கட்சிக்கும் ஒரு கொள்கை இருக்கிறது. விஜய் அவரது கொள்கையை தெரிவித்திருக்கிறர். அது சரியா தவறா என்று நான் சொல்ல முடியாது. தேர்தலுக்கு ஒன்றரை வருடம் இருக்கிறது. விஜய் இப்போது தான் கட்சி தொடங்கி மாநாடு நடத்தி இருக்கிறார். கூட்டணி என்பது தேர்தல் சமயத்தில் சூழலுக்கு தகுந்தவாறு அமைக்கப்படும் என்றார்.
மேலும், அதிமுகவிலிருந்து யாரும் பிரிந்து செல்லவில்லை.. அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டவர்கள் தான் உள்ளனர். எனவே, அதிமுகவிலிருந்து பிரிந்து சென்றவர்கள் என்ற வார்த்தையை பயன்படுத்த வேண்டாம்'' என கேட்டுக் கொண்டார்.
ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ் சேனல் மூலம் செய்திகளை உடனுக்குடன் அறியஇங்கே க்ளிக் செய்யவும்