தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

"விவசாயிகளுக்கு ஆதரவான கட்சி அதிமுக" - கிருஷ்ணகிரி வேட்பாளர் ஆதரவாக கே.பி.முனுசாமி பரப்புரை! - lok sabha election 2024

Krishnagiri Parliament candidate Jayaprakash: கிருஷ்ணகிரியில், விவசாய மக்களின் நிலத்திற்கு நேரில் சென்று பார்வையிட்டு, கன்னடம் மொழியில் பேசி கிருஷ்ணகிரி நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் ஜெயபிரகாஷ் வாக்கு சேகரித்தார்.

krishnagiri candidate jayaprakash
krishnagiri candidate jayaprakash

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 3, 2024, 6:28 PM IST

krishnagiri candidate jayaprakash

கிருஷ்ணகிரி:நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலையொட்டி அனைத்து கட்சி வேட்பாளர்களும், கட்சி நிர்வாகிகளும் தமிழகம் முழுவதும் சூறாவளி பிரச்சாரம் மேற்கொண்டு வாக்கு சேகரிப்பில் தீவிரம் காட்டி வருகின்றனர். அந்த வகையில், கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் ஜெயபிரகாசை ஆதரித்து சூளகிரி மத்திய ஒன்றியம் பகுதியில் முன்னாள் அமைச்சரும், அதிமுக துணைப் பொதுச் செயலாளருமான கே.பி முனுசாமி இன்று பரப்புரை மேற்கொண்டார்.

சூளகிரி ஒன்றியத்துக்கு உட்பட்ட உங்கட்டி, தோரிப்பள்ளி, தாசனபுரம், கானலட்டி, புளியரசி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வீடு வீடாகச் சென்றும், விவசாய நிலத்தில் பயிர் செய்பவர்களை நேரடியாகச் சந்தித்தும், கன்னட மொழியில் பேசி வாக்கு சேகரித்தார். அப்போது வாக்காளர்கள் மத்தியில் பேசிய முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி, “நடைபெறுகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணி சார்பில் ஜெயபிரகாஷ் போட்டியிடுகிறார்.

அவருக்கு ஒதுக்கியுள்ள இரட்டை இலை சின்னத்தில் வாக்களிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். சூளகிரி பகுதி விவசாயம் நிறைந்த பகுதி இந்த பகுதியில் பல்வேறு தொழிற்சாலைகள் வந்திருந்தாலும் விவசாய நிலங்களை எடுக்கக் கூடாது என கடந்த ஆட்சியிலும் இந்த ஆட்சியிலும் கோரிக்கை வைத்து விவசாய நிலங்களை எடுக்காத நல்ல சூழல் உருவாகியுள்ளது.

விவசாயப் பகுதிகளுக்கு நீர் ஆதாரம் குறைவாக உள்ள காரணத்தினால் சொட்டு நீர் பாசனம் அமைக்க வேண்டும் என்று ஜெயலலிதாவிடம் கோரிக்கை வைத்த பொழுது சொட்டு நீர் பாசனம் அமைக்க 75 சதவீதம் மானியம் வழங்கி உத்தரவு பிறப்பித்தார். அதேபோல் விவசாயிகளுக்கு இலவசமாக மின்சாரம் வழங்கினாலும் கூட பசுமைக் குடில் அமைத்து விவசாயம் செய்பவர்களுக்கு மின் கட்டணம் வசூல் செய்யப்பட்டது.

2011ல் இலவச மின்சாரம் கேட்டு பசுமைக் குடில் அமைத்து விவசாயம் செய்பவர்கள் கோரிக்கை வைத்தனர். இந்த செய்தியை ஜெயலலிதாவிடம் தெரிவித்த போது எல்லா விவசாயிகளும் ஒன்று தான் என கூறி பசுமைக் குடில் அமைத்து விவசாயம் செய்பவர்களுக்கும் மின் கட்டணத்தை ரத்து செய்தார். அந்த வகையில் விவசாயிகளுக்கு ஆதரவான கட்சி அதிமுக. அந்த கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் ஜெயபிரகாஷ்க்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெற செய்ய வேண்டும்” என்றார்.

இதையும் படிங்க: ஒவ்வொரு கோயிலும் எத்தனை பசுக்களைத் தானமாகப் பெறலாம் என வரம்பு நிர்ணயிக்கலாம் - நீதிபதிகள் கருத்து! - Cattle Donation Case

ABOUT THE AUTHOR

...view details