சென்னை: அதிமுக வழக்கறிஞர் பிரிவு இணைs செயலாளர்மான ஆர்.எம்.பாபு முருகவேல், தலைமைச் செயலகத்தில் தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகுவை நேரில் சந்தித்து இண்டு வெவ்வேறு புகார் மனுக்களை அளித்துள்ளார். அதில், “திருவள்ளூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் வேட்புமனு தாக்கலின் போது, நேற்று முன்தினம் (மார்ச் 27) திமுக கூட்டணியிலுள்ள காங்கிரஸ் வேட்பாளர் சசிகாந்த் செந்தில்,தேர்தல் விதிகளை மீறி வேட்புமனு தாக்கல் செய்யும் போது, தன்னுடன் 5 சட்டமன்ற உறுப்பினர்களை அழைத்துச் சென்று தேர்தல் விதியை மீறி இருக்கிறார்.
அதோடு மட்டுமல்லாமல், அவர்களுக்கு அனுமதி அளித்த திருவள்ளூர் மாவட்ட ஆட்சித் தலைவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆரணி நாடாளுமன்ற திமுக வேட்பாளரை ஆதரித்து, மார்ச் 26ஆம் தேதி அன்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசிய போது, தேர்தல் விதியை மீறும் விதமாக, ஏற்கனவே நடைமுறையில் உள்ள திட்டத்தைப் பற்றியும், புதிய திட்டங்களைப் பற்றியும் பேசக்கூடாது என்கின்ற விதியை மீறி, மகளிர் உரிமைத் தொகை தொடர்பாகவும் ஒரு அறிவிப்பை வெளியிட்டு தேர்தல் பிரச்சாரம் செய்திருக்கிறார்.