தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மளமளவென உயர்ந்த ஏலக்காய் விலை.. ஒரு கிலோ எவ்வளவு தெரியுமா? - Cardamom Price Hike

Cardamom Price Hike: போதிய மழையின்மை மற்றும் வரத்து குறைவு காரணமாக கடந்த 2 ஆண்டுகளுக்குப் பிறகு ஏலக்காய் விலை 3 ஆயிரம் ரூபாயைத் தாண்டி விற்பனை ஆகிறது.

ஏலக்காய் தொடர்பான கோப்பு படம்
ஏலக்காய் தொடர்பான கோப்பு படம் (Credits - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 29, 2024, 3:06 PM IST

தேனி:ஏலக்காய் உற்பத்தி மற்றும் வர்த்தகங்களில் இந்திய அளவில் தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் முதன்மை வகிக்கும் பகுதியாகத் திகழ்கின்றது. போடிநாயக்கனூர் அருகே உள்ள கேரள மாநில எல்லைப் பகுதியில் உள்ள மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பல்லாயிரக்கணக்கான ஏக்கர் அளவில் ஏலக்காய் பயிரிடப்பட்டு வருகிறது.

இப்பகுதியில் உற்பத்தி செய்யப்படும் ஏலக்காய், போடிநாயக்கனூரில் உள்ள மத்திய அரசு நறுமணப் பொருட்கள் நிறுவனம் சார்பாகவும், தனியார் ஏல மையங்கள் சார்பாகவும் விலை நிர்ணயம் செய்யப்பட்டு, வெளி மாநிலங்களுக்கும், வெளிநாடுகளுக்கும் அதிக அளவில் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது.

ஏலக்காய் தரம் பிரித்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் சுமார் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு வாழ்வாதாரமாக உள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கிலோ ஒன்றுக்கு ரூபாய் 3,000-ஐ தாண்டிய ஏலக்காய் விலை, அதன் பின்பு உற்பத்தி அதிகரிப்பு மற்றும் ஏற்றுமதி குறைவு காரணமாக விலை குறைந்து, முதல் தர ரகம் ஏலக்காய் கிலோ ஒன்றுக்கு ரூபாய் 2,200 வரை விற்கப்பட்டது.

விலை ஏற்றம்:இந்த நிலையில், கடந்த மார்ச் மாதம் முதல் தமிழக - கேரள எல்லைப் பகுதிகளில் போதிய மழையின்மை காரணமாக உற்பத்தி குறைந்து காணப்பட்டதாலும், ரம்ஜான் போன்ற பண்டிகை காரணமாகவும், கடந்த மாதம் தரம் பிரிக்கப்பட்ட முதல் ரக ஏலக்காய் கிலோ ஒன்றுக்கு ரூபாய் 2,900 வரை விற்கப்பட்டது.

இந்நிலையில், கடந்த ஓரிரு மாதங்களில் ஏலக்காய் வரத்து குறைவு காரணமாகவும், தற்போது முதல் தர ஏலக்காய் கொள்முதல் விலை ரூபாய் 3,000-ஐ தாண்டி அதிகரித்து உள்ளது. தரம் பிரிக்கப்பட்ட முதல் தர ஏலக்காய் கடந்த மாதம் வரை கிலோ ஒன்றுக்கு ரூபாய் 2,900 வரை விற்கப்பட்ட நிலையில், தற்போது ரூபாய் 400 முதல் 500 வரை விலை அதிகரித்து கிலோ ஒன்றுக்கு ரூபாய் 3,300 முதல் 3,400 வரை விற்கப்படுகிறது.

கடந்த 2 ஆண்டுகளுக்குப் பிறகு முதல் ரக ஏலக்காய் விலை ரூபாய் 3 ஆயிரத்தை தாண்டியதால் ஏலக்காய் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். சர்வதேச சந்தையில் ஆன்லைன் வர்த்தகம் மூலம் விலை நிர்ணயிக்கப்படும். ஏலக்காய் விலை தற்போது உயர்ந்து வரும் நிலையில், இன்னும் ஓரிரு மாதங்களுக்கு விளைச்சல் மற்றும் காய் வரத்து குறைவாக உள்ள நிலையில் விலை அதிகரிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க:உச்சம் தொட்ட தக்காளி விலை.. கோயம்பேடு சந்தையில் இன்றையை விலை நிலவரம் என்ன?

ABOUT THE AUTHOR

...view details