திருநெல்வேலி: பெண்கள் மற்றும் சிறுமிகளிடம் ஆசை வார்த்தை கூறி ஏமாற்றி பாலியல் வன்புணர்வு செய்து வந்த ஆட்டோ ஓட்டுநரை கைது செய்த போலீசார், அவரை சிரையில் அடைத்தனர்.
திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த 30 வயது நபர் ஒருவர், ஆட்டோ ஓட்டும் தொழிலில் ஈடுபட்டு வந்துள்ளார். இந்த நிலையில், அவர் தங்கியுள்ள பகுதியைச் சேர்ந்த பெண்கள் மற்றும் சிறுமிகளிடம் அவர் பழகி வந்துள்ளார். தொடர்ந்து, அவர்களிடம் ஆசை வார்த்தைகள் கூறி ஏமாற்றி பாலியல் வன்புணர்வு செய்து வந்துள்ளார்.
இது குறித்து பாதிக்கப்பட்ட ஒரு சிறுமி உள்பட இரண்டு இளம்பெண்கள் மற்றும் அவரது பெற்றோர், பாளையங்கோட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இதைத் தொடர்ந்து, நெல்லை மாநகர அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் இது குறித்து போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.