தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஏடிஎஸ்பி வெள்ளத்துரை சஸ்பெண்ட் விவகாரம்: ஆவேசமடைந்த அண்ணாமலை! - bjp annamalai - BJP ANNAMALAI

Bjp Annamalai: அரசு அதிகாரிகள் மற்றும் காவல் துறையினர் ஓய்வு பெரும் நாளன்று பணியிடைநீக்கம் செய்யப்படுவது, அரசியல் காழ்ப்புணர்ச்சி என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை
பாஜக மாநில தலைவர் அண்ணாமலை (Credit - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jun 1, 2024, 2:23 PM IST

திருவண்ணாமலை:தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இன்று அதிகாலையில் திருவண்ணாமலையில் உள்ள அண்ணாமலையார் கோயிலில் நடைபெற்ற சிறப்பு பூஜையில் பங்கேற்றார். இதன் பின்னர் அண்ணாமலையார் மற்றும் உண்ணாமுலையம்மன் ஆகியோரை தரிசித்தார்.

அண்ணாமலை செய்தியாளர்கள் சந்திப்பு (Credits - ETV Bharat Tamil Nadu)

முன்னதாக அண்ணாமலை திருக்கோயில் நிர்வாகத்தின் சார்பில் அவருக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அண்ணாமலை கூறுகையில்," பிரதமர் moodi இந்தியாவின் தென்கோடியில் உள்ள கன்னியாகுமரியில் கடும் தவத்தில் உள்ளார்.

நாடாளுமன்ற தேர்தளுக்கான வாக்குப்பதிவு இன்றுடன் நிறைவு பெற உள்ளது. இந்த தேர்தலிலும் பிரதமர் மோடி தலைமையிலான பாஜக வெற்றி பெற்று 3வது முறையாக ஆட்சி அமைக்க வேண்டும் என சாமி தரிசனம் செய்து உள்ளோம்.

ஏடிஎஸ்பி வெள்ளத்துரை நேற்று காலையில் ஓய்வு பெரும் நாள் அன்று பணியிடை நீக்கம் செய்யப்பட்டு மீண்டும் திரும்பப் பெற்றுள்ளனர். அரசு அதிகாரிகள் மற்றும் காவல் துறையினர் ஓய்வு பெரும் நாளன்று பணி இடை நீக்கம் செய்யப்படுவது என்பது அரசியல் காழ்ப்புணர்ச்சி என்றே நான் பார்க்கிறோன் என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், "பிரதமர் மோடி கன்னியாகுமரியில் தியான மேற்கொண்டு உள்ள நிலையில் இதை அரசியலாக்க எதிர்க்கட்சிகள் முயல்கின்றனர். யார் வேண்டுமானாலும் அரசியல் அமைப்பு சட்டப்படி தாங்கள் விரும்பியதை செய்து கொள்ளலாம், இதை தடுப்பதற்கு யாருக்கும் உரிமை இல்லை.

இன்று டெல்லியில் நடைபெற உள்ள எதிர்க்கட்சியில் இந்தியா கூட்டணி கூட்டத்திற்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் உட்பட பல கூட்டணி தலைவர்கள் பங்கேற்கவில்லை. இரண்டாம் கட்ட தலைவர்கள் மட்டுமே பங்கேற்க உள்ளனர். இன்றோடு இறுதிக்கட்ட தேர்தல் முடிவடையும் நிலையில்,

இன்று வெளியாக உள்ள தேர்தலுக்கு பிந்திய கருத்துக்கணிப்பில் (exit poll) கூட காங்கிரஸ் உட்பட இந்தியா கூட்டணியினர் பங்கேற்க மாட்டார்கள் என கூறிவருகின்றனர். 543 தொகுதிகளும் எந்த பக்கம் செல்லும் என்பது இந்தியா கூட்டணி தலைவர்களுக்கும் தெரியும்.

தேர்தல் நடக்கும் வரை தான் அவர்களது நாடகம் அது இன்று முடிந்து விட்டது. தேர்தல் முடியும் வரை தான் தாங்கள் வெற்றி பெறுவோம் என்று காங்கிரஸ் உட்பட எதிர்க்கட்சியினர் கூறி வந்துள்ளனர். இதனைப் பார்க்கும் போது காங்கிரஸ் தனது தோல்வியை ஒப்புக் கொள்ளும் விதமாகவே உள்ளது" என கூறினார்.

இதையும் படிங்க:தமிழ்நாட்டில் பாஜகவுக்கு எத்தனை இடங்களில் வெற்றி? - எல்.முருகனின் கணிப்பு இதுதான்!

ABOUT THE AUTHOR

...view details