கோயம்புத்தூர்:பெண் காவலர்களை அவதூறாக பேசிய வழக்கில் கைது செய்யப்பட்ட சவுக்கு சங்கர் மீது அடுத்தடுத்து 7 வழக்குகள் பதிவு செய்யப்பட்ட நிலையில், தேனி பழனிசெட்டிபட்டி போலீசார், சவுக்கு சங்கர் விடுதியில் வைக்கப்பட்டிருந்த கஞ்சாவை பறிமுதல் செய்து அவர் மீது வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர். இதனையடுத்து, சவுக்கு சங்கா் ஜாமீன் வழங்கக் கோரி, மனு தாக்கல் செய்திருந்தார்.
இதனையடுத்து, சவுக்கு சங்கர் விவகாரம் தொடர்பாக ரெட் பிக்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் பெலிக்ஸ் ஜெரால்ட் மீது கோவை சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும், பெலிக்ஸ் ஜெரால்டை மே 31-ம் தேதி வரை நீதிமன்ற காவலில், கோவை மத்திய சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவு பிறப்பித்திருந்தார்.
இந்த நிலையில், கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பாக பெலிக்ஸ் ஜெரால்ட்டை கோவை போலீசார் ஒரு நாள் காவல் எடுத்து விசாரணை மேற்கொண்டு மீண்டும் சிறையில் அடைத்தனர். இதற்கிடையே பெலிக்ஸ் ஜெரால்ட் தரப்பில் ஜாமின் கேட்டு கோவை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர்.
இந்நிலையில், சவுக்கு சங்கர் மற்றும் பெலிக்ஸ் ஜெரால்ட் மனு மீதான விசாரணை இன்று (திங்கட்கிழமை) கோவை 4 வது குற்றவியல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, வழக்கை விசாரித்த நீதிபதி சரவணபாபு, ஜாமீன் மனு மீதான விசாரணையை வருகிற 30-ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார். இந்நிலையில், சவுக்கு சங்கர் சென்னை புழல் சிறையிலும், பெலிக்ஸ் ஜெரால்ட் திருச்சி மத்திய சிறையில் வைக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:சவுக்கு சங்கர் குண்டாஸ் வழக்கு விவகாரம்: நீதிபதிக்கு அழுத்தம் கொடுத்த நபர்கள் மீது நடவடிக்கை கோரி வழக்கறிஞர் கடிதம்! - Savukku Shankar Case