தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'விஜயின் நடவடிக்கைகள் அரசியலில் வேற மாதிரி இருக்கும்' - உறுதியாக சொல்லும் தாடி பாலாஜி - THADI BALAJI TVK

தன்னை எதிர்ப்பவர்களுக்கு முன்பு மேலும் வளர்ந்து காட்டக் கூடியவர் தான் விஜய் சென்று விக்கிரவாண்டியில் நடிகர் தாடி பாலாஜி கூறினார்.

விஜய் கட்டவுட், தாடி பாலாஜி
விஜய் கட்டவுட், தாடி பாலாஜி (credit - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 27, 2024, 9:48 AM IST

விக்கிரவாண்டி:நடிகர் விஜயின் தமிழக வெற்றி கழகத்தின் முதல் அரசியல் மாநாடு விக்கிரவாண்டியில் இன்று மாலை தொடங்க உள்ள நிலையில், நகைச்சுவை நடிகரும், தவெக-வின் ஆதரவாளருமான நடிகர் தாடி பாலாஜி மாநாடு நடக்கும் இடத்திற்கு வந்துள்ளார்.

அங்கு அவர் செய்தியாளர்களை சந்தித்து பேசியதாவது; ''தற்போது வி. சாலையே மிகவும் பிரகாசமாக உள்ளது.. இதுபோன்ற பெரிய பிரகாசம் இதற்கு முன்னர் ஏற்பட்டது போன்று தெரியவில்லை.. பலமுறை இந்த சாலையை நாம் கடந்து சென்றுள்ளோம். தீபாவளி இன்றைக்கு தானா அல்லது 31ம் தேதியா என்பது தெரியவில்லை. அவ்வளவு பிரகாசமாக வி. சாலை திகழ்கிறது.

விஜய் பேசவில்லை என்று பலர் கூறி வருகின்றனர்.. ஆனால், அவர் பேசுவதை விட மாநாட்டில் செயலாகவே செய்துள்ளார். இதற்காக உழைத்த மாவட்ட செயலாளர்கள், தொண்டர்கள் அனைவருக்கும் தலை வணங்குகிறேன். விஜய் வெறும் அறிக்கை மட்டுமே விடுகிறார் என்று சொல்கிறார்கள். ஆனால், அவர் மாநாட்டிற்கு கர்ப்பிணி பெண்கள், சிறுவர்கள் மற்றும் முதியவர்கள் யாரும் வர வேண்டாம் என தெரிவித்து அவர்கள் மீதான அக்கறையை வெளிப்படுத்துகிறார்.. இதுவே இம்மாநாட்டின் வெற்றி ஆகும்.

நான் அவரை ஒரு சக நடிகராக தற்போது பார்க்கவில்லை.. எப்பொழுது அவர் கட்சியை ஆரம்பித்தாரோ அப்போதே அவரை தலைவராக ஏற்றுக் கொண்டேன். அவருடைய நடவடிக்கைகள் இதில் வேறு மாதிரியாக இருக்கும்.. பெரிய நல்ல உதவிகளை பொதுவெளியில் தெரியாமலேயே செய்து வருகிறார்.. இனி மக்களுக்கு விடிவு காலம் தான்.

இதையும் படிங்க:தேர்தல் களத்தில் வாக்காளர்களை எதிர்கொள்ள தவெகவுக்காக என்ன சின்னத்தை விஜய் கேட்கப்போகிறார்?

மாநாட்டிற்காக வைக்கப்பட்டுள்ள கட்டவுட் தொடர்ந்து அகற்றப்பட்டு வருகிறது.. தலைவருக்கு (விஜய்) எதிராக இப்போது யாரும் செய்யவதில்லை.. அவருக்கு ஆரம்பத்தில் இருந்து பல எதிர்ப்புகள் இருந்து வருகின்றன. அவர் அனைத்தையும் சமாளித்து தான் வருகிறார். இதற்காக நாம் கோவப்பட்டு கேள்வி கேட்டால், தவெக கட்சியினர் வாக்குவாதம் செய்கிறார்கள் என்று கூறுவார்கள். எனவே, அந்த இடத்தை விட்டு அமைதியாக கடந்து விட வேண்டும்.. பிரச்சனை வருவதற்கு தீனி போடவே கூடாது.

தலைவர் விஜய் தன்னை எதிர்ப்பவர்கள் முன் மேலும் வளர்ந்து காட்ட தான் நினைப்பார். அதனை திரைப்படத்திலேயே பார்த்திருப்பீர்கள். நான் அவரிடம் பழகியவன் என்ற முறையில் எனக்கு நன்றாக தெரியும்.

இந்த மாநாடு சிறப்பாக அமைவதற்கு காரணமாக அமைந்த தவெக பொது செயலாளர் ஆனந்த் மற்றும் இந்த மாநாட்டை இவ்வளவு பிரபலமாக்கிய பெருமை, செய்தியாளர்களாகிய உங்களையே சேரும்'' என்று கூறினார்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ் சேனல் மூலம் செய்திகளை உடனுக்குடன் அறியஇங்கே க்ளிக் செய்யவும்

ABOUT THE AUTHOR

...view details