விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் அடுத்த முண்டியம்பாக்கம் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் ஒப்பந்தப் பணியாளராக வேலை செய்து வந்தவர் மணிகண்டன். இவர் நடிகர் சூர்யாவின் நற்பணி மன்றத்தின் விழுப்புரம் மாவட்ட தலைவர் ஆவார். இந்த நிலையில் மணிகண்டன் கடந்த 7ஆம் தேதி அன்று சாலை விபத்தில் சிக்கி உயிரிழந்தார்.
இந்த செய்தியை அறிந்ததுமே நடிகர் சூர்யா மணிகண்டனின் குடும்பத்தினரை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு ஆறுதல் தெரிவித்தார். இந்த நிலையில் இன்று (பிப்.12) நடிகர் சூர்யா நேரடியாக விழுப்புரத்தில் உள்ள மணிகண்டனின் இல்லத்திற்கு சென்று மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.