சென்னை:சென்னை சாலிகிராமத்தில் உள்ள வாக்குச்சாவடியில் நடிகர் சூரி வாக்களிக்கச் சென்றுள்ளார். ஆனால், அவர் பெயர் வாக்காளர் பட்டியலில் இருந்து விடுபட்டதாக தேர்தல் நடத்தும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனால் வாக்களிக்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பிய சூரி, தனது எக்ஸ் தளத்தில் இது குறித்து வீடியோ பதிவிட்டுள்ளார்.
அந்த வீடியோவில், “என் ஜனநாயகக் கடமையைச் செலுத்துவதற்காக இப்போது வாக்களிக்க வந்தேன். இதுவரை அனைத்து தேர்தலிலும் நான் வாக்களித்துள்ளேன். ஆனால், இம்முறை வாகுச்சாவடியில் எனது பெயர் விடுபட்டு போனதாக கூறுகிறார்கள். ஆனால், எனது மனைவியின் பெயர் உள்ளது, அவர் வாக்களித்தார். நான் வாக்களிக்க முடியாதது எனக்கு வருத்தம் அளிக்கிறது. இது யாருடைய தவறு எனத் தெரியவில்லை.