தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

திருப்பதி லட்டு விவகாரத்தில் ரஜினிகாந்த் சிம்பிள் பதில்! - Rajinikanth on tirupati laddu issue - RAJINIKANTH ON TIRUPATI LADDU ISSUE

இயக்குநர் லோகேஷ் கனகராஜின் இயக்கத்தில் உருவாகி வரும் கூலி திரைப்படத்தின் படப்பிடிப்பில் இருந்து இன்று சென்னை திரும்பிய நடிகர் ரஜினிகாந்த், திருப்பதி லட்டு விவகாரம் குறித்த கேள்விக்கு ‘நோ கமெண்ட்ஸ்’ என பதிலளித்துள்ளார்.

விமான நிலையத்தில் நடிகர் ரஜினிகாந்த்
விமான நிலையத்தில் நடிகர் ரஜினிகாந்த் (Credits- ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 28, 2024, 3:11 PM IST

Updated : Sep 28, 2024, 3:56 PM IST

சென்னை:நடிகர் ரஜினிகாந்த், இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ‘கூலி’ என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விசாகப்பட்டினத்தில் நடைபெற்று வருகிறது. இதற்காக சில நாட்களுக்கு முன்பு நடிகர் ரஜினிகாந்த் சென்னையில் இருந்து விமானம் மூலம் விசாகப்பட்டினம் சென்றிருந்தார்.

இந்த நிலையில், இன்று (செப்.28) படப்பிடிப்பை முடித்துக் கொண்டு விசாகப்பட்டினத்தில் இருந்து ரஜினிகாந்த் விமான மூலம் சென்னை வந்தடைந்தார். அப்போது, சென்னை விமான நிலையத்தில் அவரது ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். மேலும், ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டு, ஆட்டோகிராப் போட்டுக் கொடுத்தார்.

இதையும் படிங்க:புதிய அணியுடன் ஐரோப்பிய கார் பந்தயத்தில் களமிறங்கும் அஜித்... வைரலாகும் மாஸ் செல்ஃபி வீடியோ!

இதையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய ரஜினிகாந்த், “வேட்டையன் படம் மிகவும் வித்தியாசமாக இருக்கும், வெளிநாடுகளிலும் வேட்டையன் படம் டிக்கெட் முன்பதிவு செய்யப்பட்டு வருவது மகிழ்ச்சி அளிக்கிறது” என தெரிவித்தார். இதையடுத்து, திருப்பதியில் லட்டு சர்ச்சை குறித்து ஆன்மீகவாதியாக உங்கள் கருத்து என்ன என கேட்ட போது “சாரி, நோ கமெண்ட்ஸ்’ என பதிலளித்து விமான நிலையத்திலிருந்து காரில் புறப்பட்டு சென்றார்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits- ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

Last Updated : Sep 28, 2024, 3:56 PM IST

ABOUT THE AUTHOR

...view details