திருப்பூர்: வீர ராகவப் பெருமாள் கோயிலில் வைகுண்ட ஏகாதசியன்று சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. இந்த நிலையில், நிகழ்ச்சியில் பங்குபெரும் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்குவதற்காக 1 லட்சத்து 8 ஆயிரம் லட்டுகள் தயாரிக்கும் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது.
அதன்படி, மூன்று டன் சக்கரை, ஒன்றரை டன் கடலை மாவு பயன்படுத்தி 1 லட்சத்து 8 ஆயிரம் லட்டு தயாரிக்கும் பணிகள் தற்போது மும்மறமாக நடைபெற்று வருகிறது. இந்த லட்டு தயாரிக்கும் பணியில் 700 தன்னார்வலர்கள் ஈடுபட்டுள்ளனர்.
ஸ்ரீ வாரி டிரஸ்ட் ஒருங்கிணைப்பாளர் ராமகிருஷ்ணன் (ETV Bharat Tamilnadu) சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி :
வைகுண்ட ஏகாதசி விழா வருகிற 10-ஆம் தேதி வெள்ளிக்கிழமை உலகம் முழுவதிலும் உள்ள பெருமாள் கோயில்களில் நடைபெற உள்ளது. இதற்காக அனைத்து பெருமாள் கோயில்களிலும் சிறப்பு ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. அந்த வகையில், திருப்பூர் வீரராகவப் பெருமாள் கோயிலில் வைகுண்ட ஏகாதசியன்று நடக்க உள்ள சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சிக்கான, சிறப்பு ஏற்பாடுகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது.
லட்டு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள தன்னார்வலர்கள் (ETV Bharat Tamil Nadu) வருடந்தோறும், இந்த கோயிலில் நடைபெறும் வைகுண்ட ஏகாதசி சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சியில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துக்கொண்டு சாமி தரிசனம் செய்வது வழக்கம். அவ்வாறு வருகை தரும் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கிட, திருப்பூர் ஸ்ரீவாரி டிரஸ்ட் (Sri Vaari Trust) சார்பில் லட்டுகள் தயாரிப்பது வழக்கமாக நடைபெற்று வருகிறது.
லட்டுகள் தயாரிக்கும் பணிகள் தீவிரம்:
அந்த வகையில், வருகிற 10-ஆம் தேதி நடைபெற உள்ள வைகுண்ட ஏகாதசி சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சியில், ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்துக்கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காக, திருப்பூர் ஸ்ரீ வாரி டிரஸ்ட் சார்பில் 15-வது வருடமாக 1 லட்சத்து 8 ஆயிரம் லட்டுகள் தயாரிக்கும் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது.
தயார் செய்யப்பட்டுள்ள லட்டுகள் (ETV Bharat Tamil Nadu) இதையும் படிங்க:வைகுண்ட ஏகாதசி: திருச்சி ஶ்ரீரங்கம் கோயிலில் கோலாகலத் துவக்கம்.. பரமபத வாசல் திறப்பு எப்போது?
இது குறித்தி ஸ்ரீ வாரி டிரஸ்ட் ஒருங்கிணைப்பாளர் ராமகிருஷ்ணன் கூறுகையில், “ திருப்பூர் வீரராகவப் பெருமாள் கோயிலில் சொர்க வாசல் திறப்பு நிகழ்ச்சிக்காக கடந்த 15 வருடங்களாக 1 லட்சத்து 8 ஆயிரம் லட்டுகள் தயாரிக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.
அதன்படி, மூன்று டன் சர்க்கரை, ஒன்றரை டன் கடலை மாவு, 150 டின் எண்ணெய், திராட்சை, முந்திரி, நெய் உள்ளிட்ட பொருட்களை பயன்படுத்தி பிரசாதம் தயாரிக்கப்பட்டு வருகிறது. திருப்பூர் காமாட்சி அம்மன் திருமண மண்டபத்தில் நடைபெற்று வரும் இப்பணிகளில், 700 தன்னார்வலர்கள் ஈடுபட்டுள்ளனர்.
மேலும், லட்டு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள தன்னார்வலர்களுக்கு கேப் (Head cap), கையுறைகள் (Gloves) உள்ளிட்டவை வழங்கப்பட்டு பாதுகாப்பான முறையில் லட்டு தயாரிக்கப்பட்டு வருகிறது. விருப்பமுள்ள தன்னார்வலர்கள் இந்த பணிகளில் கலந்து கொள்ளலாம்” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.