தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நாகை அருகே கேரளா வேன் கவிழ்ந்து விபத்து; வேளாங்கண்ணிக்குச் சென்று விட்டு திரும்பிய போது நடந்த சோகம்! - Van accident in Nagapattinam - VAN ACCIDENT IN NAGAPATTINAM

Van accident in Nagapattinam: வேளாங்கண்ணிக்கு சுற்றுலா வந்து திரும்பிய கேரளா வேன், சீராவட்டம் பாலம் அருகே கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், வேனில் பயணித்த ஓட்டுநர், நடத்துநர் உட்பட 17 பேர் சிறு காயங்களுடன் உயிர் தப்பினர்.

விபத்துக்குள்ளான வேன்
விபத்துக்குள்ளான வேன் புகைப்படம் (Credits - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 19, 2024, 3:39 PM IST

நாகப்பட்டினம்: கேரள மாநிலம், நத்தையம் பகுதியைச் சேர்ந்த 15 பேர் வேளாங்கண்ணிக்கு ஆம்னி வேனில் நேற்று சுற்றுலா வந்துள்ளனர். இந்த நிலையில், பிரார்த்தனை முடித்துவிட்டு வேளாங்கண்ணியில் இருந்து, இன்று காலை கிழக்கு கடற்கரை சாலை வழியாக கேரளாவிற்கு திரும்பியுள்ளனர். அப்போது, திருக்குவளை அருகே உள்ள சீராவட்டம் பாலம் அருகே வந்த போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த வேன், சாலையோரம் உள்ள 10 அடி பள்ளத்தில் வயலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இதில் அதிர்ஷ்டவசமாக ஓட்டுநர், நடத்துநர் உள்ளிட்ட வேனில் பயணித்த 17 பேரும் சிறு காயங்களோடு உயிர் தப்பினர். இதனைக் கண்ட அப்பகுதி மக்கள், காயமடைந்தவர்களை மீட்டு, இரண்டு ஆம்புலன்ஸ் மூலம் திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்த திருக்குவளை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதனைத் தொடர்ந்து, கவிழ்ந்து விபத்துக்குள்ளான ஆம்னி வேனை ஜேசிபி இயந்திரம் மூலம் மீட்கும் பணி நடைபெற்று வருகிறது. நாகப்பட்டினம் மாவட்டத்தில் காலை முதலே பரவலாக மழை பெய்து வருவதால், வேன் கட்டுப்பாட்டை இழந்து விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என போலீசார் தரப்பில் கூறப்படுகிறது.

இதையும் படிங்க:பொள்ளாச்சியில் வெளுத்து வாங்கிய மழை.. சாக்கடை நீர் வெளியேறியதால் பொதுமக்கள் அவதி! - Pollachi Rain

ABOUT THE AUTHOR

...view details