சென்னை: வடபழனியில் உள்ள விசிக தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் மாநில உயர்நிலைக்குழு கூட்டம் நடைபெற்றது. கட்சியின் தலைவர் திருமாவளவன் தலைமையில் நடைபெற்ற, இந்த கூட்டத்தில் அக்கட்சியின் துணை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா பேசுகையில், தேர்தல் கூட்டணி, திமுக உடனான உறவு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களை சுட்டிக்காட்டிப் பேசினார்.
"உதயநிதி அப்படி சொன்னது தப்பு!" தேர்தல் முடிவை தீர்மானிப்பது வி.சி.க. தான் என்கிறார் ஆதவ் அர்ஜுனா - Aadhav Arjuna
Aadhav Arjuna: 2016 சட்டமன்றத் தேர்தலில் திமுக தோல்வியடைய விசிக கூட்டணியில் இல்லாதது தான் காரணம் என அக்கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா தெரிவித்துள்ளார்.
Published : Aug 28, 2024, 6:19 PM IST
|Updated : Aug 28, 2024, 7:06 PM IST
மேலும் வி.சி.க. நடத்தும் மகளிர் மது ஒழிப்பு மாநாட்டின் பிரச்சார திட்டத்தை ஆதவ் அர்ஜுனா விளக்கினார். அப்போது பேசிய அவர் , “2016 தேர்தலில் திமுக கூட்டணி தோல்வி அடைந்ததற்கு பூரண மதுவிலக்கு என்கிற வாக்குறுதி தான் காரணம் என உதயநிதி அவர்கள் தவறான தகவலை பதிவு செய்துள்ளார், ஆனால் தரவுகளின்படி கூட்டணியில் இருந்து விசிக வெளியேறியது தான் திமுகவின் தோல்விக்கு மிக முக்கிய காரணம்” என்று அவர் கூறினார். மேலும் தொலைக்காட்சி விவாதங்களில் பங்குபெறும் கட்சி நிர்வாகிகள், இந்த தகவலை பதிவு செய்ய வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார். ஆதவ் அர்ஜுனாவின் பேச்சு திமுக கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.