தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

17வயது சிறுவனுடன் லிவிங் டுகெதரில் இருந்த இளம் பெண் தற்கொலை! - காரணம் என்ன? - A young girl commit sucide - A YOUNG GIRL COMMIT SUCIDE

சென்னையில் 17வயது சிறுவனுடன் லிவிங் டுகெதரில் இருந்த இளம்பெண் நேற்று தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும், அப்பெண் தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பாக கடிதம் மற்றும் ஆடியோ வெளியிட்டு இருந்ததால் போலீசார் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தாம்பரம் துணை ஆணையாளர் அலுவலகம்
தாம்பரம் துணை ஆணையாளர் அலுவலகம் (Credits - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 23, 2024, 10:41 PM IST

சென்னை : கர்நாடக மாநிலம், பெங்களூருவைச் சேர்ந்தவர் குளோரியா(24). இவர் சென்னை மேற்கு தாம்பரத்தில் உள்ள துணிக்கடையில் வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் குளோரியா அதே துணிக்கடையில் வேலை பார்த்து வந்த 17 வயது சிறுவனுடன் பழகி வந்ததுள்ளார்.

இதையடுத்து இருவரும் காதலிக்க தொடங்கியுள்ளனர். இருவரும் வீட்டிற்கு தெரியாமல் தாம்பரம் ரங்கநாதபுரம் ஐந்தாவது தெருவில் வீடு வாடகைக்கு எடுத்து லிவிங் டுகெதர் (Living Together) ஆக வாழ்ந்து வந்ததாக கூறப்படுகிறது.

கடந்த மூன்று நாட்களுக்கு முன்னர் குளோரியா 17 வயது சிறுவனுடன் வெளியே சென்று விட்டு வீடு திரும்பியுள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு குளோரியா தங்கியிருந்த வீட்டில் இருந்து துர்நாற்றம் வருவதாக அக்கம்பக்கத்தினர் தாம்பரம் காவல் நிலையத்தில் தகவல் அளித்துள்ளனர்.

அந்த தகவலின் பேரில், சம்பவ இடத்திற்க்கு விரைந்து வந்த போலீசார் கதவை உடைத்து வீட்டிற்கு உள்ளே சென்று பார்த்தனர். அப்போது குளோரியா தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்துள்ளது. இதனையடுத்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இளம் பெண் ஆடியோ (Credits - ETV Bharat Tamilnadu)

இதையும் படிங்க:காதுல போன், கழுத்துல திமுக துண்டு! பணியிடை நீக்கம் செய்தும் அடங்காத அரசு பேருந்து ஓட்டுநர்!

பின்னர் வழக்குப்பதிவு செய்து வீட்டில் சோதனை செய்த போது, குளோரியா எழுதிய கடிதத்தை போலீசார் கைப்பற்றி உள்ளனர். அதில், "சாரி நான் உன்னை காயப்படுத்தி விட்டேன். உன்கூட வாழ ஆசைப்பட்டேன். ஆனால் உன்கூட வாழமுடியவில்லை" என அந்த கடித்ததில் குறிப்பிட்டிருந்தது.

கடிதம் (Credits - ETV Bharat Tamil Nadu)

மேலும், இச்சம்பவம் குறித்து சந்தேக மரணம் என்ற பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து மேற்கொண்டு விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில், குளோரியா உடன் பழகி வந்த சிறுவன் குளோரியாவின் நடவடிக்கை பிடிக்காமல் தனது சொந்தவூரான செஞ்சிக்கு சென்றதும், அவரைத் தேடி சென்ற குளாரியாவை சிறுவனின் உறவினர்கள் வயது வித்தியாசம் காட்டி திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தாக கூறப்படுகிறது.

இதனால் மன வேதனையில் இருந்த குளோரியா வழக்கமாக ரீல்ஸ் பதிவு செய்யும் இன்ஸ்டாகிராம் ஐ.டியில் தற்கொலை செய்து கொள்ளப் போவதாக வாக்குமூலம் பதிவு செய்துவிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

தற்கொலையை விடுக (Credits - ETV Bharat Tamil Nadu)
குளோரியாவுக்கு பெற்றோர் இல்லாத நிலையில் சகோதருக்கு போலீசார் தகவல் தெரிவித்து உடற்கூறு ஆய்விற்க்கு பின் ஒப்படைத்துள்ளார். தொடர்ந்து போலீஸ் விசாரணை செய்து வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்ப்படுத்தி உள்ளது.

ABOUT THE AUTHOR

...view details