மயிலாடுதுறை: ஆயுதப்படையில் பெண் காவலராக பணியாற்றி வந்தவர் கமலி(24). இவர் தமிழ்நாடு காவல்துறை பெண்கள் கால்பந்து அணியிலும் விளையாடி வந்துள்ளார்.
இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு நாடாளுமன்ற தேர்தல் பணிக்கு சென்று திரும்பிய நிலையில் கமலிக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் கடந்த 10 ஆம் தேதி சென்னை கே.எம்.சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார்.
மேலும் இவருக்கு சிறுநீரகத் தொற்று நோய் இருப்பதும் தெரியவந்துள்ளது. இதையடுத்து மேல் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில், சிகிச்சை பலனளிக்காமல் பெண் காவலர் கமலி மருத்துவமனையில் நேற்று முன்தினம் இரவு உயிரிழந்தார்.
இதையடுத்து நேற்று காவலரின் உடலை அவரது சொந்த ஊரான திருவாரூர் மாவட்டம், மாவூர் கிராமத்திற்கு கொண்டு செல்லப்பட்டு காவல்துறையின் இறுதி மரியாதை செலுத்தப்பட்டு உடல் நல அடக்கம் செய்யப்பட்டுள்ளது. மேலும் ஆயுதப்படையில் பணியாற்றி வரும் பெண் காவலருக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் சக காவலர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க:மனைவியைக் கொலை செய்த மத போதகர் வீட்டில் பெட்டி பெட்டியாக கிடைத்த போதை மாத்திரைகள்! - Narcotic Pills Seized