நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் கோட்டாறு பகுதியை சேர்ந்தவர் 37 வயதான பெண். இவருக்கு இதுவரை திருமணம் ஆகவில்லை. இந்நிலையில், நாகர்கோவில் பகுதியில் உள்ள எரிவாயு விநியோகிக்கும் நிறுவனத்திற்கு வேலைக்கு சென்று உள்ளார். அங்கு வேலை அளித்த உரிமையாளர் நவனித் (32) இவருடன் நெருங்கி பழகி திருமண ஆசை காட்டி, அவருடன் தொடர்பில் இருந்ததாக கூறப்படுகிறது. பின்னர் அந்த பெண் உரிமையாளரிடம் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு நெருக்கடி கொடுத்த நிலையில், அவரை நிறுவனத்தில் இருந்து நீக்கி உள்ளார்.
இதனால் மனமுடைந்த பெண் வடசேரி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். ஆனால், அந்த புகார் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது. இதற்கிடையே, அந்த பெண் வாடகைக்கு தங்கி இருந்த வீட்டின் உரிமையாளர், திடீரென இவரை வெளியேற்றி உள்ளார். இதற்கும் எரிவாயு நிறுவனத்தின் உரிமையாளர் மற்றும் அவரது நண்பர்கள் தான் காரணம் எனவும் கூறப்படுகிறது.
இதனால் நிர்கதியான அந்த பெண் கடந்த இரு தினங்களுக்கு முன்பு தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதை அறிந்த உறவினர்கள் அவரை ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி அவர் பரிதாபகரமாக உயிரிழந்தார்.
இறப்பதற்கு முன்பாக சிகிச்சையில் இருக்கும் போது, அந்த பெண்ணிடம் காவல் துறை அதிகாரி ஒருவர் வீடியோ வாக்குமூலம் பதிவு செய்துள்ளார். அந்த வீடியோவில் எரிவாயு நிறுவன உரிமையாளர் நவனித் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாகவும், அது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்த போது வடசேரி காவல் ஆய்வாளர் ஜெயலட்சுமி உள்ளிட்ட அதிகாரிகள் தன்னை தரக்குறைவாக பேசியதோடு 'செத்துப் போ' என தற்கொலை செய்ய தூண்டும் வகையில் பேசியதாகவும் கூறி உள்ளார்.
இதையும் படிங்க:டீ போட்டு கொடுத்த பக்கத்துக்கு வீட்டு பெண்.. இளைஞர் செய்த அதிர்ச்சி செயல்.. பரபரப்பான எட்டயபுரம்!