திண்டுக்கல்:திண்டுக்கல் மாவட்டம், பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவில் அடிவாரம் சுற்றியுள்ள பகுதியில் ஆக்கிரப்பு கடைகள் அதிகமாக இருப்பதாக திருத்தொண்டர் சபை நிறுவனர் ராதாகிருஷ்ணன் தொடர்ந்த வழக்கில் கிரிவலப்பாதையில் எந்த விதமான வாகனங்கள் செல்லவும் தடை விதிக்கப்பட்டு ஆக்கிரமிப்பு கடைகள் வீடுகள் அகற்றப்பட்டு வருகிறது.
இந்நிலையில், ஆயிரக்கணக்கான சிறு குறு வியாபாரிகள் வாழ்வாதாரத்தை இழந்து பாதிக்கப்பட்டுள்ளதாகவும், கோவில் நிர்வாகம் நகராட்சி விஷயங்களில் தலையிடுவதாகவும் கிரிவலப்பாதையானது, நகராட்சிக்கு சொந்தமானது. இதை பராமரிப்பு பணிகளுக்காக மட்டுமே பயன்படுத்த வேண்டும் என 1948ஆம் ஆண்டு வழங்கப்பட்டது.
இதில், 1974ஆம் ஆண்டு அரசாணையின்படி கிரிவலம் பாதையில் கோவில் நிர்வாகம் அடைக்கக் கூடாது என்கின்ற உத்தரவை மீறி தற்போது நீதிமன்ற உத்தரவைக் காரணம் காட்டி, கிரிவலப்பாதையில் அனைத்து விதமான வாகனங்களும் இவ்வழியாக செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால், ஏராளமான விவசாயிகள் தங்களது விவசாயப் பொருட்களைக் கொண்டு செல்லவும் முடியாமல் பாதிக்கப்பட்டுள்ளனர்.