சோழவந்தான்:மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே உள்ளது திருவேடகம். இங்குள்ள காளியம்மன் கோவில் தெருவில் வசித்து வருபவர் ஆறுமுகம் மகன் அய்யனார் (40). இவர் அதே பகுதியைச் சேர்ந்த முத்துசாமி மற்றும் அவரது மனைவி தவமணி, பேரன் சிறுவன் மிதுன் (7) ஆகியோரை வீடு புகுந்து மது போதையில் கத்தியால் சரமாரியாக குத்தியுள்ளார்.
இந்த தாக்குதலால் படுகாயம் அடைந்த முத்துசாமி, தவமணி மற்றும் சிறுவன் மிதுன் ஆகியோர் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டனர். இதில் பலத்த காயம் அடைந்த சிறுவன் மிதுன் இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதையும் படிங்க:திமுக பிரமுகர் கொலைக்கு பழிக்கு பழி.. திண்டுக்கல் துப்பாக்கி சூட்டில் அதிரும் பின்னணி