தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

"திமுக மாணவரணி அமைப்பாளர் என்பது ஜில்லா கலெக்டருக்கு சமம்" - ஆ.ராசா எம்பி!

dmk meeting: திமுகவில் மாணவரணி அமைப்பாளர் என்றால் அது ஜில்லா கலெக்டருக்கு சமம் என்றும் துணை அமைப்பாளர் என்றால் சப் கலெக்டருக்கு சமம் எனவும் ஆ.ராசா எம்பி கூறினார்.

dmk meeting
dmk meeting

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 29, 2024, 8:23 PM IST

கோயம்புத்தூர்:திமுக மாணவரணி மாவட்ட, மாநில, துணை அமைப்பாளர்கள் ஆலோசனை கூட்டம் கோவை காளப்பட்டி சாலையில் உள்ள சுகுணா கலையரங்கத்தில் நடைபெற்றது. இதற்கு திமுக மாணவரணி செயலாளர் சி.வி.எம்.பி. எழிலரசன் தலைமை தாங்கினார்.

இந்த கூட்டத்தில் பிப்.1-ல் சென்னையில் யுனைடெட் ஸ்டூடன்ட்ஸ் ஆப் இந்தியா கூட்டமைப்பின் பேரணி குறித்தும், கலைஞர் நூற்றாண்டை முன்னிட்டு மாநில அளவிலான பேச்சு மற்றும் கட்டுரை இறுதிப் போட்டி குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.

மேலும் இடஒதுக்கீடு முறையை சதி செயல் மூலம் அழிக்க நினைக்கும் யு.ஜி.சி.க்கு கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்வது, உள்ளிட்ட 8 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முன்னதாக இக்கூட்டத்தில் திமுக துணைப் பொதுச் செயலாளர் ஆ.ராசா எம்பி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

அப்போது அவர் பேசியதாவது "தமிழ் சமுதாயத்தை ஒரு அறிவுள்ள சமுதாயமாக ஆக்கும் வேலையை செய்து வருவது மாணவரணி. 1950களில், உலகங்களில் நடைபெற்ற போராட்டங்கள், வெற்றிகள் அனைத்தையும் கொண்டு வந்து நிறுத்திய அணி மாணவரணி என்பதை எண்ணி பார்க்கிறேன்.

திமுகவில் மாணவரணி அமைப்பாளர் என்றால் அது ஜில்லா கலெக்டருக்கு சமம், துணை அமைப்பாளர் என்றால் சப் கலெக்டருக்கு சமம். ஆனால் அதற்கான தகுதியை நீங்கள் வளர்த்துக் கொள்ள வேண்டும். நமது பண்பாடு திராவிட பண்பாடு, வரலாற்று சிறப்பு மிக்க தொண்மை மிக்கத்து திருக்குறள்.

சுயநலமும், பொதுநலமும் கலந்ததுதான் அரசியல் வாழ்க்கை. உங்களை தகுதிபடுத்திக் கொள்ளுங்கள். உங்களுக்கு இந்த மொழிக்கு, இனத்திற்கு எதாவது செய்ய வேண்டும் என கடைசி வரை இருக்க வேண்டும். நான் சட்டமன்ற உறுப்பினராக வந்து விடுவேன் என இருப்பது திமுக அல்ல. ஆனால், உங்களுக்கு தேவையானவற்றை நிறைவேற்ற வேண்டிய பொறுப்பு எங்களுக்கு உள்ளது.

உங்கள் தனிமனித வாழ்க்கையிலும் என்ன வேண்டுமோ அதையும் செய்ய நாங்கள் தயார். திராவிடம் என்றால், சுய மரியாதை, சமத்துவம், மதசார்பின்மை, மாநில சுயாட்சி, இவை ஐந்தும்தான் திராவிடம் என முதல்வர் தெளிவாக சொல்லியுள்ளார். சாதி - மதம் இல்லாமல் வாழலாம், வாழ முடியும், வாழ வேண்டும்.

ஆனால், மொழி இல்லாமல் வாழ முடியாது. அதுதான் ஒரு இனத்தின் அடையாளம். திராவிடத்தத்துவம் தான் மோடிக்கு எதிராக, இந்தியாவை காப்பாற்றுக்கின்ற ஒரு மிகப்பெரிய ஆயுதமாக இருக்க போகின்றது என்பதை வட நாட்டில் உள்ள தலைவர்கள் எல்லாம் நாடாளுமன்றத்தில் ஒப்புக் கொள்கிறார்கள்.

அப்படிப்பட்ட தத்துவத்திற்கு சொந்தமான இயக்கத்தின் மாணவரணியின் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் பெருமிதம் கொள்ள வேண்டும்" என்று தெரிவித்தார். இந்த ஆலோசனை கூட்டத்தில், கலந்து கொண்ட அனைவருக்கும், "அறிவோம் - திராவிடம்" என்ற நூல் வழங்கப்பட்டது.

இதையும் படிங்க:அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 17வது முறையாக நீட்டிப்பு!

ABOUT THE AUTHOR

...view details