தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வேளச்சேரி 'நன்னீர் குளம்'... ஆறு மாதத்துக்குள் பயன்பாட்டுக்கு வரும்.. மழை நீரை தேக்கி நீர் ஆதாரமாக மாறும் - அமைச்சர் உறுதி! - VELACHERY RAINWATER HARVESTING POND

வேளச்சேரியில் மழைநீர் தேக்கி வைக்கும் புதிய நன்னீர் குளம் ஆறு மாத காலத்தில் பயன்பாட்டிற்கு வரவுள்ளது என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி
அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி (credit - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 9, 2024, 3:33 PM IST

சென்னை:வெள்ள பாதிப்பினை தடுத்திடும் வகையில் சென்னை வேளச்சேரியில் வெட்டப்பட்டுள்ள புதிய குளத்தினை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று (நவ.9) நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

இதில், தென் சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன், சென்னை மாநகராட்சி ஆணையர் குமரகுருபர் மற்றும் சென்னை மாநகராட்சி மேயர் பிரியா ராஜன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

ஆய்வுக்கு பின் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது; ''ஒவ்வொரு பருவ மழைக்கும், சென்னை மாநகரம் பெரிய பாதிப்புக்கு உள்ளாகி வந்தது. ஒரு முறைக்கு பல முறை நேரில் ஆய்வு செய்து சென்னை மாநகராட்சி மற்றும் நெடுஞ்சாலை துறை, பொதுப்பணித்துறை, நீர்வளத்துறை நிர்வாகம் என அனைத்தும் சிறப்பாக செயலாற்றி, பல்வேறு மாற்றங்கள் சென்னை மாநகரில் செய்து வருகிறது. அதன் அடிப்படையில், வடகிழக்கு பருவமழை தொடங்கிய போதே பல இடங்களில் மழைப்பொழிவு அதிகமாக இருந்தது. இருப்பினும் ஓரிரு மணி நேரத்தில் மழை நீர் வடிந்தது.

பக்கிங்காம் கால்வாய்: குறிப்பாக, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் 2006 ஆம் ஆண்டு துணை முதலமைச்சராக இருந்த பொதுதான் வேளச்சேரியில் பல்வேறு பணிகளை மேற்கொண்டார். இதன் காரணமாகத்தான் மழைநீர் வடிந்து பக்கிங்காம் கால்வாய் வழியாக கடலுக்கு செல்ல ஏற்பாடு செய்யப்பட்டது. சென்னையில், 20 சென்டி மீட்டர் அளவு மழையை தாங்கக்கூடிய கட்டமைப்பை இந்த அரசு ஏற்படுத்தியுள்ளது. மேலும், நூற்றுக்கும் மேற்பட்ட நாகர்கள் இந்த வேளச்சேரி பகுதியில் இருக்கிறது. அவைகள் ஒவ்வொரு மழைக்கும் பெரிய பாதிப்பை சந்தித்து வருகிறது.

இதையும் படிங்க:19 ஆயிரம் புதிய ஆசிரியர்களை கொண்டு வர முடிவு... அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல்..!

வேளச்சேரியில் சுமார் 5 ஏக்கர் நிலத்தை தனியார் ஆக்கிரமிப்பு செய்திருந்த நிலையில், அந்த நிலங்கள் மீட்கப்பட்டு தற்போது 13,800 சதுர அடி பரப்பளவில் மழைநீர் தேங்கும் வகையில் புதிய நன்னீர் குளம் உருவாக்கப்பட்டு வருகிறது.

வரப்போகும் குளம்: குளம் கட்டி முடிக்கப்பட்டவுடன் இரு பக்கமும் உள்ள கறைகளை நடப்பாதை அமைத்து இந்தப் பகுதி ஒரு சுற்றுலா மையமாக விரைவில் வர உள்ளது. 1.25 மில்லியன் கன அடி தண்ணீர் தேக்கி வைக்கும் கொள்ளளவு கொண்ட குளமாக இந்த குளம் அமைய உள்ளது. அதற்கான பணிகளை மாநகராட்சி நிர்வாகம் செய்து வருகிறது. 2,500 சதுர மீட்டர் அளவுக்கு பூங்கா திட்டமிடப்பட்டுள்ளது. தென் சென்னையை பொறுத்தவரை இன்னொரு சுற்றுலா மையம் என்பதன் அடிப்படையில், இன்னும் 6 மாத காலத்தில் வர உள்ளது.

நீர் ஆதாரமாகவும் அமையும்: பெரும்பாக்கம், சோழிங்கநல்லூர் போன்ற பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் உபரி நீர், தனியார் இடத்தின் வழியாக வெளியே செல்வதற்கு, மாநகராட்சி அவர்களுடன் கேட்டு அங்கேயும் கால்வாய் அமைக்கும் பணி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த இரண்டு பணிகளும் முடிவுற்ற பின் தென் சென்னையில் மிகப்பெரிய அளவில் மழைநீர் வெள்ள பாதிப்புகள் தவிர்க்கப்படும். மேலும், கோடை காலத்தில் மற்றும் குளிர்காலத்தில் இந்த குளத்தின் மூலம் தேக்கி வைக்கப்படும் நீர் சுற்றுப்புற மக்களுக்கு நிலத்தடி நீர் ஆதாரமாகவும் அமையும்.

சென்னையில் கடந்த 150 ஆண்டுகளில் நீர் நிலைகள் காணாமல் போன நிலையில், புதிய நீர்நிலைகளை முதலமைச்சர் உருவாக்கி வருகிறார். இது சென்னையினுடைய புதிய அத்தியாயமாக இருக்கும். குறிப்பாக ஆக்கிரமிப்பு போன்ற பகுதிகளை சட்ட ரீதியாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும்'' என்றார்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ் சேனல் மூலம் செய்திகளை உடனுக்குடன் அறியஇங்கே க்ளிக் செய்யவும்

ABOUT THE AUTHOR

...view details