தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பிரேக் அப் செய்த டியூஷன் மிஸ்.. 17 வயது சிறுவனின் 'கேஷ் ஆன் டெலிவரி' டார்ச்சர்.. சென்னையில் வினோத சம்பவம்! - love torture to ex - LOVE TORTURE TO EX

chennai boy love torture: சென்னையில் காதலை தொடர மறுத்த பெண்ணிற்கு ஆன்லைனில் பரிசுப் பொருட்களை அனுப்பி காதல் தொந்தரவு செய்த 17 வயது சிறுவனை காவல்துறையினர் கைது செய்தனர்.

representative image
representative image (credit - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jul 23, 2024, 1:26 PM IST

சென்னை: சென்னை பெரிய மேட்டை சேர்ந்த 22 வயதான கல்லூரி மாணவி வீட்டில் டியூஷன் எடுத்து வந்துள்ளார். இந்நிலையில், அந்த டியூஷனுக்கு அதே பகுதியில் உள்ள 17 வயது சிறுவன் படித்து வந்துள்ளான். அப்போது அவர்கள் இடையே காதல் ஏற்பட்டதாகவும், பெற்றோருக்கு விஷயம் தெரிய வரவே அந்த பெண் காதலை தொடர மறுத்து சிறுவனை விட்டு விலகி சென்றதாக கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரம் அடைந்த அந்த சிறுவன் அந்த கல்லூரி மாணவியின் வீட்டு முகவரிக்கு இரண்டு நாட்களில் அமேசான், ஃபிலிப்கார்ட், ஸ்விகி உள்ளிட்ட ஆன்லைன் செயலிகள் மூலம் நூற்றுக்கும் மேற்பட்ட ஆர்டர்கள் செய்து கேஷ் ஆன் டெலிவரி போட்டு அனுப்பி டார்ச்சர் செய்துள்ளார். மேலும், 77 முறை ஓலா மற்றும் ஊபரில் வாகனகளை புக் செய்து பெண்ணின் வீட்டுக்கு அனுப்பியும் உள்ளார். இதனால், மிகவும் தொந்தரவுக்கு உள்ளான அந்த பெண்ணின் வீட்டார் கடந்த மாதம் 2ம் தேதி சைபர் க்ரைமில் புகார் அளித்துள்ளனர்.

அதில், தனது மகளின் தொலைபேசி எண்ணிற்க்கு ஒரு குறிப்பிட்ட தொலைபேசி எண்ணிலிருந்து ஒருவர் அடிக்கடி தொந்தரவு செய்வதாகவும், தனது மகளின் பெயரில் அனுமதியின்றி ஆன்லைன் மூலமாக பொருட்களை ஆர்டர் செய்து அனுப்பி வைத்து தொந்தரவு செய்வதாக தெரிவித்திருந்தார். இதையடுத்து காவல்துறையினர் செயலியில் பயன்படுத்தப்பட்ட இ-மெயில்,தொலைபேசி எண் ஆகியவற்றை கொண்டு தீவிர விசாரணை நடத்தினர்.

இந்த விசாரணை இறுதியில் பெண்ணை தொந்தரவு செய்த 17 வயது சிறுவனை கடந்த 20ம் தேதி காவல்துறையினர் கைது செய்து அவரிடமிருந்து 2 செல்போன்கள் வைஃபை ரூட்டர்கள் உள்ளிட்ட சாதனங்களை கைப்பற்றினர். தொடர்ந்து, சிறுவனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அதனை தொடர்ந்து சிறுவனுக்கு மன நல ஆலோசனை வழங்கி ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

இதையும் படிங்க:காதல் திருமணம்.. 2 ஆண்டு கழித்து பழிதீர்த்த பெண் வீட்டார்.. ஓசூர் இளைஞர் கொலையில் அதிரும் பின்னணி!

ABOUT THE AUTHOR

...view details