தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

லுக் அவுட் நோட்டீஸால் சிக்கிய நபர்.. பணத்தை மோசடி செய்துவிட்டு தலைமறைவு.. சென்னை ஏர்போர்ட்டில் கைது! - CHENNAI AIRPORT ARREST

பண மோசடி வழக்கில் தேடப்பட்டு வந்த குஜராத்தை சேர்ந்த நபர் மூன்று ஆண்டுகள் கழித்து சென்னை விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார்.

உபேந்திர குமார் நட்வர்லால், விமானம் கோப்புப்படம்
உபேந்திர குமார் நட்வர்லால், விமானம் கோப்புப்படம் (credit - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 26, 2024, 9:37 AM IST

சென்னை:குஜராத் மாநிலம் அகமதாபாத்தைச் சேர்ந்தவர் உபேந்திர குமார் நட்வர்லால் (40). இவர் நண்பருடன் கூட்டாக தொழில் செய்து வந்தார். இந்த நிலையில், நண்பரை ஏமாற்றிவிட்டு பெருமளவு பண மோசடி செய்துவிட்டு வெளிநாட்டிற்கு தப்பிச்சென்று தலைமறைவு ஆகிவிட்டார்.

இதையடுத்து, உபேந்திர குமார் மீது அகமதாபாத் மாநகர பொருளாதார குற்றப்பிரிவு போலீசில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து உபேந்திரா குமாரை கைது செய்து விசாரணை நடத்த தேடி வந்தனர். ஆனால், உபேந்திர குமார் வெளிநாட்டிற்கு தப்பி சென்று தொடர்ந்து தலைமறைவாக இருந்தார்.

இதையடுத்து அகமதாபாத் காவல்துறை உபேந்திர குமாரை தேடப்படும் குற்றவாளியாக அறிவித்தது. அதோடு கடந்த 2021 ஆம் ஆண்டு அனைத்து சர்வதேச விமான நிலையங்களுக்கும் லுக் அவுட் நோட்டீஸ் (LOC) அனுப்பப்பட்டிருந்தது.

இதையும் படிங்க:ரெட் அலர்ட் எதிரொலி: பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.. எந்தெந்த மாவட்டங்களுக்கு தெரியுமா?

இந்த நிலையில், லண்டனிலிருந்து அபுதாபி வழியாக எத்தியாட் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தது. அந்த விமானத்தில் வந்த பயணிகளின் பாஸ்போர்ட் மற்றும் ஆவணங்களை சென்னை விமான நிலைய குடியுரிமை அதிகாரிகள் பரிசோதித்து பயணிகளை அனுப்பி கொண்டு இருந்தனர்.

அப்போது கடந்த 3 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த உபேந்திர குமார் இந்த விமானத்தில் லண்டனில் இருந்து சென்னை வந்தார். அவருடைய பாஸ்போர்ட் மற்றும் ஆவணங்களை குடியுரிமை அதிகாரிகள் கம்ப்யூட்டரில் பரிசோதித்த போது இவர் கடந்த மூன்று ஆண்டுகளாக பண மோசடி, நம்பிக்கை மோசடி ஆகிய வழக்குகளில் அகமதாபாத் மாநகர போலீசால் தேடப்படும் தலை மறைவு குற்றவாளி என தெரிய வந்தது.

இதையடுத்து குடியுரிமை அதிகாரிகள் உபேந்திர குமாரை வெளியில் விடாமல் பிடித்து சென்னை விமான நிலைய காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். மேலும், குடியுரிமை அதிகாரிகள் அகமதாபாத் மாநகர காவல் ஆணையரகத்திற்கும் தகவல் தெரிவித்தனர்.

இதையடுத்து அகமதாபாத் மாநகர தனிப்படை போலீசார் உபேந்திர குமாரை கைது செய்து அகமதாபாத்திற்கு அழைத்துச் செல்லும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

பண மோசடி வழக்கில் தேடப்பட்டு வந்த குஜராத்தை சேர்ந்த நபர் மூன்று ஆண்டுகள் கழித்து சென்னை விமான நிலையத்தில் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ் சேனல் மூலம் செய்திகளை உடனுக்குடன் அறியஇங்கே க்ளிக் செய்யவும்

ABOUT THE AUTHOR

...view details