சென்னை:கடந்த ஆண்டு செங்குன்றம், பாடியநல்லூர் பகுதியைச் சேர்ந்த அதிமுக நிர்வாகி பார்த்திபன் என்பவர் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில், காரனோடை பகுதியை சேர்ந்த மோகன்ராஜ் நீதிமன்றத்தில் சரணடைந்தார். மோகன் ராஜ் மீது ஏற்கனவே பல்வேறு காவல் நிலையங்களில் வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்நிலையில், பார்த்திபன் கொலை வழக்கில் தாமாக சரணடைந்த மோகன் ராஜை காவலில் எடுத்து விசாரித்த போலீசார், பார்த்திபன் கொலை வழக்கில் மோகன் ராஜ் போலியாக சரண்டைந்துள்ளார் என கூறி அவரை இந்த வழக்கில் எதிரியாக சேர்க்க மறுத்து விடுவித்தனர்.
அதைவேளையில், 30 கிலோ கஞ்சா வாங்கி வைத்து விற்பனை செய்து வந்ததாக வழக்கு பதிவு செய்து மோகன் ராஜ் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். கடந்த ஆண்டு ஆகஸ்ட் முதல் சுமார் 14 மாதங்கள் சிறையில் இருந்த மோகன் ராஜ் ஜாமீனில் கடந்த 10 தினங்களுக்கு முன்பு சிறையில் இருந்து வெளியே வந்துள்ளார்.
இதையும் படிங்க:துணை முதல்வர் உதயநிதிக்கு ஆடை கட்டுப்பாடு விதிக்க வேண்டும்: உயர் நீதிமன்றத்தில் வழக்கு
அதன் பின்னர், மோகன் ராஜ் எவ்வித குற்றங்களிலும் ஈடுப்படாமல் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. மோகன் ராஜ் வெளியே வந்த பின்னரும், சோழவரம் போலீசார் அவர் மீது வழக்கு போடுவதாக நெருக்கடி கொடுத்ததாகவும், மேலும் அவரது காதலி ஷாலினி என்ற பெண்ணிற்கும் நெருக்கடி கொடுத்ததாக கூறி மோகன் ராஜ் வீடியோ வெளியிட்டு கடந்த செவ்வாய்க்கிழமை அன்று ஆந்திராவில் மோகன் ராஜ் மற்றும் அவரது காதலி இருவரும் தற்கொலைக்கு முயன்றுள்ளனர்.