தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

போலீசாரை பேனா கத்தியால் தாக்கியவர் மாவு கட்டுடன் கைது..! புதுச்சேரிக்கு சென்று தூக்கிய போலீஸ்!

காட்டுமன்னார்கோவில் அருகே வாகன சோதனையின்போது போலீசாரை பேனா கத்தியால் தாக்கிவிட்டு தப்பியவர் கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்ட விஸ்வநாதன்
கைது செய்யப்பட்ட விஸ்வநாதன் (credit - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 6, 2024, 1:32 PM IST

கடலூர்: காட்டுமன்னார்கோவில் அருகே வாகன சோதனையின்போது போலீசார் கையை கத்தியால் கீறி தப்பிய நபர் கைமுறிந்த நிலையில் கைது செய்யப்பட்டார்.

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயில் அருகே உள்ள குமராட்சி காவல் நிலையத்தை சேர்ந்த தலைமை காவலர் ஜெயராமன் மற்றும் முதுநிலை காவலர் தேவநாதன் இருவரும் நேற்று இரவு ஒரு மணி அளவில் வாகன சோதனையில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர்.

அப்போது, இருசக்கர வாகனத்தில் வந்த ஒருவரை நிறுத்தி விசாரணை செய்த போது அவர் குடிபோதையில் இருப்பது தெரிய வந்தது. தொடர்ந்து அவரை விசாரித்தபோது, அந்த நபர் வைத்திருந்த பேனா கத்தியால் காவலர்கள் இருவரையும் கையில் கீறிவிட்டு அங்கிருந்து தப்பி சென்றுள்ளார்.

இதையும் படிங்க:வன்னியர் சங்கத் தலைவருக்கு கொலை மிரட்டல்.. ‘காவல்துறை வேடிக்கை பார்ப்பதா?’ - ராமதாஸ் கண்டனம்!

இதையடுத்து இரு காவலர்களும் சிதம்பரம் அரசு ராஜா முத்தையா மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். சம்பவம் பற்றிய தகவல் அறிந்த கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உடனடியாக குற்றவாளிகளை பிடிக்க உத்தரவிட்டதன் பேரில், உதவி ஆய்வாளர் மணிகண்டன் மற்றும் டெல்டா பிரிவு போலீசார் இருசக்கர வாகனத்தின் பதிவெண்ணை வைத்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

அதில், காவலர்களை கத்தியால் தாக்கிவிட்டு தப்பியது புதுச்சேரி, வில்லியனூர் பகுதியைச் சேர்ந்த கலியமூர்த்தி மகன் விஸ்வநாதன் என தெரிய வந்தது. இதை அடுத்து போலீசார் அவரை கைது செய்ய முயன்றபோது அங்கிருந்து அவர் ஓட்டம் பிடித்து பின்னர் போலீசாரிடம் சிக்கியுள்ளார்.

இந்த சம்பவத்தில் விஸ்வநாதன் தவறி விழுந்ததில் அவருக்கு கை முறிவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. தொடர்ந்து அவரை கைது செய்து கடலூர் தலைமை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு கொண்டு வந்து பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ் சேனல் மூலம் செய்திகளை உடனுக்குடன் அறியஇங்கே க்ளிக் செய்யவும்

ABOUT THE AUTHOR

...view details