தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக மோசடி; தஞ்சையில் ஒருவர் கைது..! - TANJORE JOB SCAM

தஞ்சையில் வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக மோசடி செய்த நபர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

கைதான முருகானந்தம்
கைதான முருகானந்தம் (credit - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 14, 2024, 4:22 PM IST

தஞ்சாவூர்:படித்த இளைஞர்களை குறி வைத்து வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி சமூக வலைதங்களில் சில போலியான நிறுவனங்கள் விளம்பரப்படுத்தி மோசடியில் ஈடுபட்டு வருவதாக அவ்வப்போது காவல்துறை எச்சரித்து வருகிறது.

அந்த வகையில், தஞ்சாவூர் மாவட்டத்தில் வேலைக்கு செல்ல முயற்சி செய்யும் படித்த இளைஞர்கள் மற்றும் பொதுமக்களை குறி வைத்து சில நபர்கள், பல்வேறு துறைகளில் நல்ல சம்பளத்தில் வேலை வாங்கித் தருவதாக பொய்யான வாக்குறுதிகளை பரப்பி வருவதாக, சமீப நாட்களாக குற்றசாட்டுகள் இருந்து வருகின்றன. இதனை தடுக்க தஞ்சாவூர் மாவட்டம் முழுவதும் பல்வேறு முறைகளில் பொது மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

இதையும் படிங்க:'நாய் கடிபட்ட குரங்கும், கால்நடை மருத்துவரும்'.. சென்னை ஐகோர்ட்டில் இப்படியொரு வழக்கு..!

இந்நிலையில், தஞ்சாவூர் மாவட்டம் வல்லம் உட்கோட்டம், தமிழ் பல்கலைக்கழக காவல் நிலையத்தில், கடந்த 13ஆம் தேதி தஞ்சையை அடுத்த நாஞ்சிக்கோட்டையை சேர்ந்த நாகராஜன், ஒரத்தநாடு நெடுவாக்கோட்டையை சேர்ந்த விக்னேஷ், கும்பகோணம் நாச்சியார் கோவிலை சேர்ந்த மகேஸ்வரன், சூரக்கோட்டையை சேர்ந்த கௌதம் ஆகியோர் புகார் கொடுத்தனர்.

அந்த புகாரில், வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக ஆசை வார்த்தை கூறி மோசடி செய்து, ஒவ்வொரு நபரிடமும் ரூபாய் 40 ஆயிரம் பணத்தைப் பெற்று தங்களை வெளிநாடு அனுப்பாமல் ஏமாற்றியதாக மேற்கண்ட 4 நபர்கள் புகார் கொடுத்ததன் பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கின் விசாரணையில், புதுக்கோட்டையை சேர்ந்த முருகானந்தம் (38) என்பவரை காவல் உதவி ஆய்வாளர் அசோக்குமார் மற்றும் கள்ளப் பெரம்பூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் ராஜ்கமல் உள்ளிட்ட போலீசார் அடங்கிய குழுவினரால் கைது செய்தனர். விசாரணைக்கு பிறகு நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தி அவரை சிறையில் அடைத்தனர்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ் சேனல் மூலம் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே க்ளிக் செய்யவும்

ABOUT THE AUTHOR

...view details