திருப்பத்தூர்:திருப்பத்தூர் மாவட்டம் மடவாளம் பகுதியைச் சேர்ந்த வடிவேல் என்பவரின் மகன் அன்பு (55). இவர் அதேபகுதியில் தன்னுடைய வீட்டின் அருகாமையிலேயே முடிதிருத்தும் கடை ஒன்றை நடத்தி வருகிறார். இவருக்கு இரண்டு பெண் பிள்ளைகள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். இந்த நிலையில், கடந்த சில மாதங்களாக இவருடைய கடைக்கு எவரும் முடிதிருத்தும் செய்ய வரவில்லை எனக் கூறப்படுகிறது.
மேலும், இதன் காரணமாக போதிய வருமானம் இல்லாத காரணத்தினால், அவர் வறுமை நிலைக்கு தள்ளப்பட்டதாகவும் அதனால் கடந்த சில நாட்களாகவே மிகுந்த மன உளைச்சலிலும் இருந்ததாகக் கூறப்படுகிறது. இதனிடையே கடந்த செவ்வாய்க்கிழமை (பிப்.4) வீட்டை விட்டுச் சென்றவர் சென்ற அன்பு, வீடு திரும்பாத நிலையில் குடும்பத்தினர் அவரை பல்வேறு இடங்களில் தேடிப் பார்த்துள்ளனர்.