புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி அருகே அமைந்துள்ள மாத்தூர் ராமசாமிபுரத்தில் முத்துமாரியம்மன் கோயில் உள்ளது. இந்தக் கோயிலில் தேரோட்டத் திருவிழா நேற்று மாலை நடைபெற இருந்த நிலையில், அதற்கான முன்னேற்பாடுப் பணிகள் மற்றும் தேரை அலங்கரிக்கும் பணிகள் காலை முதல் நடைபெற்று வந்தன.
அப்போது தேரின் கும்பத்தை மேலே ஏற்றும் பணி நடைபெற்றுக் கொண்டிருந்த போது, எதிர்பாராத விதமாக அதன் கயிறு அறுந்து விழுந்ததில் அங்கு பணியாற்றிக் கொண்டிருந்த மகாலிங்கம் என்பவர் உள்ளிட்ட ஐந்து பேர் படுகாயம் அடைந்துள்ளனர். காயம் அடைந்தவர்களை அந்த கிராம மக்கள் மீட்டு, தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பேராவூரணி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துக் கொண்டுச் சென்ற போது, மகாலிங்கம் (60) என்பவர் செல்லும் வழியிலேயே உயிரிழந்துவிட்டார்.