சென்னை:வெளியூர்களிலிருந்து வேலைத் தேடி சென்னைக்கு வரும் அப்பாவி பெண்களைக் குறிவைத்து, சில கும்பல் தனியார் நிறுவனங்களில் அதிக சம்பளத்தில் வேலை வாங்கித் தருவதாக ஆசை வார்த்தை கூறி பாலியல் தொழில் ஈடுபடுத்தி வருவது காவல்துறைக்குத் தெரியவந்துள்ளது.
அந்த கும்பல்களைப் பிடிக்க விபச்சார தடுப்புப் பிரிவு போலீசார் மற்றும் ரோந்து போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனாலும், காவல்துறையின் கண்ணில் மண்ணைத் தூவிவிட்டு இடைத்தரகர்கள் மூலம் மோசடி கும்பல் பாலியல் தொழிலில் ஈடுபட்டு வருகிறது.
இந்நிலையில், விபச்சார தடுப்புப் பிரிவு போலீசாருக்கு கிடைத்த ரகசியத் தகவலின் அடிப்படையில், நீலாங்கரை, கொட்டிவாக்கம் பகுதியில் ஒரு வீட்டை கண்காணித்தபோது, அங்கு பெண்களை வைத்து பாலியல் தொழில் நடத்தியது உறுதி செய்யப்பட்டது.