தேனி:கம்பம் பகுதியில் பகலில் வடை கடை நடத்தி வந்தும், இரவில் செயின் பறிப்பில் ஈடுபட்டும் வந்த பலே கில்லாடி நபரை கைது செய்த போலீசார் அவரை சிறையில் அடைத்துள்ளனர். மேலும், அவர் பெண்ணிடம் இருந்து பறித்துச் சென்ற தாலி செயின் உள்ளிட்டவற்றையும் பறிமுதல் செய்து நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
தேனி மாவட்டம் கம்பம் பாரதியார் நகரைச் சேர்ந்தவர் ஆனந்த செல்வி (வயது 45). இவர் டிசம்பர் 11ஆம் தேதி கடையில் வேலை முடிந்துவிட்டு, இரவு வீட்டிற்கு நடந்து சென்றுள்ளார். அப்போது ரொட்டி கடை சந்து பகுதியில் சென்று கொண்டிருந்த போது, எதிரே ஹெல்மெட் அணிந்து மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர் ஒருவர் ஆனந்த செல்வியின் கழுத்தில் இருந்த மஞ்சள் கயிறுடன் கூடிய 6 கிராம் தங்கத் தாலி மற்றும் கவரிங் செயினை பறித்துக் கொண்டு தப்பியோடியதாகக் கூறப்படுகிறது.
அதனைத் தொடர்ந்து, இந்த சம்பவம் தொடர்பாக, ஆனந்த செல்வி கம்பம் தெற்கு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் அடிப்படையில், வழக்குப் பதிவு செய்த இன்ஸ்பெக்டர் முத்துலட்சுமி திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட நபரை தீவிரமாகத் தேடி வந்துள்ளனர்.